திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1065 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி தான் அத்விதீயனாய் இருந்தானே யாகிலும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் – எனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன்,
தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. –2-2-8 | பதவுரை Show / Hideமுனிவன், Munivan - உலகங்களைப் படைக்க ஸங்கல்பம் செய்தவனும் (- (எவ்வுள் கிடந்தான்-.)) மூர்த்தி மூவர் ஆகி, Moorthi Moovar Aagi - பிரமன் விஷ்ணு சிவன் என்று மூன்று மூர்த்தியாக நிற்பவனும் வேதம் விரித்து உரைத்த புனிதன், Vedham Virithu Uraitha Punithan - வேதப் பொருள்களை வெளியிட்ட வியக்தமாக பவித்திரனும் பூவை வண்ணன், Poovai Vannan - காயாம்பூப்போன்ற திரு நிறத்தை யுடையவனும் அண்ணல், Annal - ஸர்வ ஸ்வாமியும் புண்ணியன், Punniyan - வடிவுகொண்ட புண்ணியமானவனும் விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்யஸூரிகளுக்குத் தலைவனும் தனியன், Thaniyan - “ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்று உபநிஷத்தில் ஓதப்பட்டவனும் தான் சேயன் ஒருவனாகிலும், Thaan Cheyan Oruvanagilum - தான் ஒருவர்க்கும் எட்டாத வொருவனா யிருந்தாலும் தன் அடியார்க்கு இனியன், Than Adiyarkku Iniyan - தன்னுடைய அடியவர்களுக்குப் பரம போக்யனா யிருப்பவனும் எந்தை, Endhai - எமக்குத் தந்தையா யிருப்பவனுமான எம் பெருமான், Em Perumaan - ஸ்வாமியானவன் |