திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1067 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1067பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி அவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் – அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் —என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை, வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன், கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார், அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே. –2-2-10
பதவுரை Show / Hide
தொண்டர், Thondar - பக்தர்கள்
இண்டை கொண்டு, Indai Kondu - புஷ்ப மாலைகளை ஏந்திக் கொண்டு
ஏத்த, Aetha - துதிக்கும்படியாக
எவ்வுள் கிடந்தானை, Evvul Kidandhaanai - திருவெவ்வுளூரிலே சயனித்தருள்பவனான பெருமான் விஷயமாக,
வண்டு பாடும் பை புறவில் மங்கையர்கோன் கலியன், Vandu Paadum Pai Puravil Mangaiyarkon Kalyan - வண்டுகள் களித்துப் பாடா நின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியான ஆழ்வார்
கொண்ட சீரால், Konda Seeraal - நெஞ்சிலே கொண்ட பகவத் குணங்களாலே
தண் தமிழ் செய், Than Tamil Sei - அழகிய தமிழ்ப் பாஷையிலருளிச் செய்த
மாலை, Maalai - சொல்மாலையாகிய
ஈர் ஐந்தும், Eer Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
அண்டம் ஆள்வது ஆணை, Andam Aalvathu Aanai - இந்த பிரஹ்மாண்டங்களையெல்லாம் செங்கோல் செலுத்தி ஆளப் பெறுவது திண்ணம்;
அன்றேல், Andrel - இவ் வுலகங்களை ஆள்வதில் ஆசையற்றவர்களாகில்
அமரர் உலகு ஆள்வர், Amarar Ulagu Aalvar - பரமபதந் தன்னையே ஆளப் பெறுவர்கள்.
அமருலகு, Amarulagu - அமரருவகு.