திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1069 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1069பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்-அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பண்ணுமவன் – கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும் சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை – ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களாலே எப்போதும் ஒக்க இனியனானவனை – தன்னையே ஆஸ்ரயிக்கும் படி ஜகத் காரண பூதனாய் உள்ளவனை –அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை – அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை அடிமை கொண்ட -உபகாரகனை – ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும், கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத் தோர்தொழு தேத்தும், ஆதியை யமுதை யென்னை யாளுடை அப்பனை ஒப்பவ ரில்லா மாதர்கள் வாழும், மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-2
பதவுரை Show / Hide
வேதத்தை, Vedaththai - வேதஸ்வரூபியானவனும்
சுவை, Suvai - அவரவர்களுடைய ருசிக்குத் தக்கபடி
வேதத்தின் பயனை, Vedaththin Payanai - வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களின் பலன்களைக் கொடுப்பவனும்
விழுமிய முனிவர் விழுங்கும், Vizhumiya Munivar Vizhungum - சிறந்த முனிவர்களால் அநுபவிக்கப்படுகிற
கோது இல் இன் கனியை, Kothu Il In Kaniyai - கோதற்ற போக்யமான பழம் போன்றவனும்
நந்தனார் களிற்றை, Nandhanar Kalittrai - நந்தகோபர் வயிற்றிற் பிறந்த ஆனைக்கன்று போன்ற பிள்ளையானவனும்
குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை, Kuvalayaththor Thozhuthu Aeththum Aadhiye - பூமியிலுள்ளாரெல்லாரும் வணங்கித் துதிக்கநின்ற ஜகத்காரணபூதனும்
அமுதை, Amuthai - அமுதம்போலே போக்யனானவனும்
என்னை ஆள் உடை அப்பனை, Ennai Aal Udai Appanai - என்னை அடிமை கொண்டவனுமான எம்பிரானை
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும், Oppavar Illa Maathargal Vaalum - ஒப்பற்ற ஸ்த்ரீகள் வஸிக்கப் பெற்ற
மாடம் மா மயிலை, Maadam Maa Mayilai - மாடங்களையுடைய சிறந்த மயிலைக் கடுத்த
திரு அல்லிக்கேணி, Thiru Allikeni - திருவல்லிக்கேணியிலே
கண்டேன், Kandein - ஸேவிக்கப்பெற்றேன்.