திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1070 | பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை – ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | வஞ்சனை செய்யத் தாயுரு வாகி வந்தபே யலறிமண் சேர,
நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை,
விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து துதிசெய்யப் பெண்ணுரு வாகி,
அஞ்சுவை யமுத மன்றளித் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-3 | பதவுரை Show / Hideவஞ்சனை செய்ய, Vanjanai Seyya - கபடமாகக் கொல்வதற்காக (- (திருவல்லிக்கேணி கண்டேன்-.)) தாய் உரு ஆகி வந்த, Thaai Uru Aagi Vantha - தாய் வடிவு கொண்டுவந்த பேய், Pei - பூதனை யென்னும் பேய்ச்சி அலறி, Alari - கதறிக்கொண்டு மண் சேர, Man Cheera - தரையிலே விழும்படியாக நஞ்சு அமர்முலை ஊடு, Nanju Amarmulai Oodu - விஷந்தடவின (அவளது) முலைவழியாக உயிர் செக, Uyir Sek - அவளுடைய பிராணன் ஒழியும்படியாக உண்ட, Unda - முலைப்பாலுண்ட நாதனை, Nadhanai - ஸ்வாமியானவனும் தானவர் கூற்றை, Thaanavar Koottrai - அஸூரர்கட்கு யமன் போன்றவனும் விஞ்சை வானவர், Vinchai Vaanavar - வித்யாதரர்களென்ன சாரணர், Saaranar - சாரணர்களென்ன சித்தர், Siddhar - ஸித்தர்களென்ன ஆகிய தேவவர்க்கமடங்கலும் வியந்து, Viyandhu - ஆச்சரியப்பட்டு துதி செய்ய, Thudi Seyya - தோத்திரம் செய்யும்படி பெண் உரு ஆகி, Pen Uru Aagi - மோஹிநீவேஷமெடுத்து அன்று, Andru - முன்னொரு காலத்திலே அம் சுவை அமுதம் அளித்தானை, Am Suvai Amudham Aliththaanai - இனிய சுவையுள்ள அமுதத்தை (தேவர்களுக்கு) அளித்தவனுமான பெருமானை |