திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1071 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1071பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த மழையின் அளவு அல்லாத பெரிய மலையாலே மழையைத் தடுத்து –அப்படியே சந்த துக்க வர்ஷிணி -என்கிற என்னுடைய சம்சாரம் ஆகிற வர்ஷத்தை பரிகரிக்க வந்தவன் என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த எழில்விழ வில்பழ நடைசெய், மந்திர விதியில் பூசனை பெறாது மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர் அந்தமோ டினவா நிரைதள ராமல் எம்பெரு மானரு ளென்ன, அந்தமில் வரையால் மழைதடுத் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-4
பதவுரை Show / Hide
இந்திரனுக்கு என்று, Indiranukku Endru - இந்திரனை உத்தேசித்து (- (திருவல்லிக்கேணி கண்டேன்-.))
ஆயர்கள் எடுத்த, Aayargal Edutha - இடையர்களால் நடத்தப்பட்டு வந்த
எழில் விழவில், Ezhil Vizhavil - சிறந்த உத்ஸவத்திலே
பழநடை செய், Pazhanadai Sei - அநாதி ஆசாரமாகச் செய்து வருகிற
மந்திரம் விதியில் பூசனை பெறாது, Manthiram Vidhiyil Poosanaik Peradhu - ஸங்கேதப்படி நடக்கவேண்டிய ஆராதனையைப் பெறாமல்
மழை பொழிந்திட, Mazhai Pozhindhida - (இந்திரன்) மழை பெய்விக்க,
ஆயர், Aayar - இடையர்
தளர்ந்து, Thalarndhu - துன்பப்பட்டு
எம் பெருமான், Em Perumaan - “எங்களுக்குத் தலைவனான கண்ணபிரானே!
எம் தம்மோடு, Em Thammodu - நாங்களும்
இனம் ஆ நிரை, Inam Aa Nirai - கூட்டங்கூட்டமான பசுக்களின் திரளும்
தளராமல், Thalaramal - (மழையினால்) நோவு படாதபடி
அருள் என்ன, Arul Enna - ரக்ஷித்தருளவேணும்” என்று பிரார்த்திக்க
அந்தம் இல் வரையால், Andham Il Varaiyal - அளவில்லாத (மிகப்பெரிய) கோவர்த்தனமலையைக கொண்டு
மழை தடுத்தானை, Mazhai Thaduthaanai - அந்த மழையைத் தடுத்தருளின பெமானை