திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1072 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1072பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ யபதியாய் இருக்கையாலே அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் – ஆஸ்ரித விஷயத்தில் தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவன் – எனக்கு ஸ்வாமியாய் –என் குலத்துக்கு நாதன் ஆனவன் -திருவல்லிக்கேணிக் கண்டேனே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும் இன்பன்நற் புவிதனக் கிறைவன், தந்துணை யாயர் பாவைநப் பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம் வன்துணை, பஞ்ச பாண்டவர்க் காகி வாயுரை தூதுசென் றியங்கும் என்துணை, எந்தை தந்தைதம் மானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-5
பதவுரை Show / Hide
இன் துணை, In Thunai - தனக்கினிய துணையான (- (திருவல்லிக்கேணி கண்டேன்-.))
பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன், Pathumathu Alar Magal Thanakku Inban - தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு இன்பனும்
நல் புவி தனக்கு இறைவன், Nal Puvai Thanakku Iraivan - ஸ்ரீபூமிப் பிராட்டிக்கு நாதனும்
தன் துணை, Than Thunai - தன்னையே துணையாகவுடையளான
ஆயர்பாவை நப்பின்னை தனக்கு இறை, Aayarpaavai Nappinnai Thanakku Irai - ஆயர்மகளான நப்பின்னைப் பிராட்டிக்கு நாயகனும்
மற்றையோர்க்கு எல்லாம், Mattraiyorkku Ellam - மற்றுமுள்ள எல்லார் தமக்கும்
வன் துணை, Van Thunai - ஒருகாலும் விட்டு நீங்காத துணையாயிருப்பவனும்
பஞ்ச பாண்டவர்க்கு ஆகி, Pancha Pandavarkku Aagi - பஞ்ச பாண்டவர்களுக்காய்
தூது சென்று, Thoodhu Sendru - தூதனாக எழுந்தருளி
வாய் உரை இயங்கும், Vaai Urai Iyankum - வாய் வார்த்தைகளைச் சொன்னவனும்
என் துணை, En Thunai - எனக்குத் துணையானவனும்
எந்தை தந்தை தம்மானை, Endai Thandai Thammaanai - எம் குலநாதனுமான பெருமானை