திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1074 | பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் – இலக்குமனோடு மைதிலியும் தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தி- கண்டு அனுபவித்தார்களோடு –கேட்டார் வாய் கேட்டாரோடு வாசியற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று – அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை திருவல்லிக்கேணிக் கண்டேனே—என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7 | பரதனும் தம்பி சத்துருக் கனன்னும் இலக்கும னோடுமை திலியும்
இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந் தகனையெம் மானை,
குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு குயிலொடு மயில்கள்நின் றால,
இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-7 | பதவுரை Show / Hideபரதனும், Barathanum - பரதாழ்வானும் தம்பி சத்துருக்கனனும், Thambi Sathurukkananum - அவனது தம்பியான சத்ருக்நாழ்வானும் இலக்குமனோடு, Ilakkumanodu - லக்ஷ்மணணும் மைதிலியும், Maithiliyium - ஸீதாபிராட்டியும் இரவும் நன்பகலும் துதி செய்ய நின்ற, Iravum Nanpakalum Thudi Seyya Nindra - இடைவிடாது தோத்திரம் பண்ணும்படியாக எழுந்தருளியிருக்கிற இராவண அந்தகனை எம்மானை, Iravana Andhakanai Emmaanai - ராவண ஸம்ஹாரியான பெருமானை, குரவமே கமழும் குளிர் பொழிலூடு, Kuravame Kamazhum Kulir Pozhiloodu - குரவமலர்களே பரிமளிக்கின்ற குளிர்ந்த சோலைகளிலே குயிலொடு மயில்கள் நின்று ஆல, Kuyilodu Mayilgal Nindru Aala - குயில்களும் மயில்களும் ஆரவாரிக்க, இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா, Iraviyin Kathirgal Nuzhaithal Seythu Ariya - ஸூர்ய கிரணங்கள் உள்ளே நுழைந்தறியாத (எப்போதும் நிழல் செய்திருக்கிற) திரு அல்லிக்கேணி, Thiru Allikeni - திருவல்லிக்கேணியிலே கண்டேன், Kandein - ஸேவிக்கப்பெற்றேன். |