திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1075 | பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாயில் ஓர் ஆயிர நாமம் –-அவன் அப்போது சொல்லிற்று-நால் இரண்டாகிலும் பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் – நால் இரண்டு -ஸ்ரீ திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்–ஸ்ரீ நாராயண -ஸ்ரீ ஹரி என்றுமாம் -ஸ்ரீ விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் – ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே ஸ்ரீ நரசிம்ஹமாய் அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை வெளி இட்டான் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்,
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்,
தெள்ளிய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-8 | பதவுரை Show / Hideபள்ளியில் ஓதி வந்த, Palliyil Oadhi Vanda - பள்ளிக்கூடத்தில் வாசித்து விட்டு வீட்டுக்கு வந்த (- (திருவல்லிக்கேணி கண்டேன்.)) தன் சிறுவன் வாயில், Than Siruvan Vayil - தனது மகனான ப்ரஹ்லாதனுடைய வாயில் ஓர் ஆயிரம் நாமம், Oru Aayiram Naamam - விலக்ஷணமான ஸஹஸ்ர நாமங்கள் ஒள்ளிய ஆகி போத, Olliya Aagi Podha - அழகாக உச்சரிக்கப்பட்டு வர ஆங்கு, Aangu - அக்காலத்திலே அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி, Adhanukku Ondrum Oru Poruppu Ilan Aagi - அதை எள்ளளவும் பொறுக்கமாட்டாதவனாய் (இரணியன்) பிள்ளையை சீறி வெகுண்டு, Pillaiyai Seeri Vegundu - அந்த ப்ரஹ்லாதன்மீது மிகவும் கோபித்து தூண் புடைப்ப, Thoon Pudaippa - தூணைத் தட்டினபோது பிறை எயிறு அனல் விழி பேழ் வாய், Pirai Eiyiru Anal Vizhi Pezh Vayi - பிறைபோன்ற பற்களையும் நெருப்புப்பொறி கிளர்கின்ற கண்களையும் பெரிய வாயையுமுடைய தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை, Thelliya Singam Aagiya Thevai - தெளிசிங்கப் பெருமாளாகத் திருவவதரித்த தேவனை |