திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1076 | பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம் போம்படியாக ஸ்ரீ பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படியாக ஸ்ரீ திரு வாழியை ஏவினான் ஆயிற்று –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-9 | பதவுரை Show / Hideமீன் அமர்பொய்கை, Meen Amarpoykai - மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே (- (மாடம் மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேன்.)) நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு, Naal Malar Koyvaan Vetkaiyinodu - புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு சென்று இழிந்த, Sendru Izhindha - போய் இறங்கின கான் அமர் வேழம், Kaan Amar Vezham - காட்டில் திரியும் கஜேந்திரன் கை எடுத்து அலற, Kai Eduthu Alara - தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக கரா, Karaa - முதலையானது அதன் காலினை கதுவ, Adhan Kaalinai Kathuva - அவ் யானையின் காலைத் கௌவிக்கொள்ள, ஆனையின் துயரம் தீர, Aanaiyin Thuyaram Theera - அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி புள் ஊர்ந்து சென்று, Pul Oornthu Sendru - பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு (பொய்கைக் கரையிலே) எழுந்தருளி நின்று, Ninru - அங்கே நின்று ஆழி தொட்டானை, Aazhi Thottanai - திருவாழியை (அந்த முதலையின்மீது) பிரயோகித்த பெருமானை, தேன் அமர்சோலை, Then Amarsolai - தேன்மாறாத சோலைகளையுடைய |