திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1077 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1077பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –நித்ய அனுபவம் பண்ணலாம் படியான ஸ்ரீ நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .) 10
மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும் மாடமா ளிகையும்மண் டபமும், தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத் திருவல்லிக் கேணிநின் றானை, கன்னிநன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க்கலி கன்றி, சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர்வா னுலகே. –2-3-10
பதவுரை Show / Hide
மன்னு தண் பொழிலும், Mannu Than Pozhilum - நித்தியமாய் குளிர்ந்த சோலைகளும்
வாவியும், Vaaviyum - நீர் நிலங்களும்
மதிளும், Mathilum - மதில்களும்
மாடம் மாளிகையும், Maadam Maaligaiyum - மாட மாளிகைகளும்
மண்டபமும், Mandapamum - மண்டபங்களும் உண்டாம்படி
தென்னன் தொண்டையர்கோன் செய்த, Thennan Thondaiyarkon Seitha - பாண்டிய குலத்தவனான தொண்டைமான் சக்கரவர்த்தி  நிருமித்த
நல் மயிலை திரு அல்லிக்கேணி நின்றாணை, Nal Mayilai Thiru Allikeni Nindraanai - அழகியமயிலைக்கடுத்த திருவல்லிக்கேணியிலே  நின்றளும் பெருமான் விஷயமாக,
கன்னி நல் மாடம் மங்கையர்தலைவன், Kanni Nal Maadam Mangaiyarthalaivan - அழிவில்லாத நல்ல மாடங்களையுடைய திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும்
காமரு சீர், Kaamaru Seer - சிறந்த ஸ்ரீவைஷ்ணவலக்ஷ்மியை உடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
சொல் மாலை பத்து உடன், Sol Maalai Pattu Udan - சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
சுகம் இனிதுவான் உலகு, Sukam Inidhuvaan Ulagu - ஆநந்தமயமான பரமபதத்தை
ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர்கள்.