திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1078 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு நறையூரிலே நின்றான்-ஸ்ரீ திருவாலியிலே இருந்தான்-ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்தான்-ஸ்ரீ திருக் கோவலூரிலே நடந்தான் – இடம் மா மலையாவது நீர் மலையே –மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை வாஸ ஸ்தானம் ஆகிறது இல்லை இறே – உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனான தேசம் ஸ்ரீ திரு நீர் மலை- என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க்
கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ்
நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,
நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-1 | பதவுரை Show / Hideஅன்று, Andru - கிருஷ்ணனாய்ப் பிறந்த அக்காலத்து ஆயர்குலம் கொடியோடு, Aayarkulam Kodiyodu - இடைக்குலத்திற் பிறந்தகொடி போன்ற நப்பின்னை பிராட்டியோடும் அணி மா மலர் மங்கையொடு, Ani Maa Malar Mangaiyodu - மிகச் சிறந்த தாமரை மலரிற் பிறந்த பெரிய பிராட்டியோடும் அன்பு அளவி, Anbu Alavi - அன்புடன் கலந்தவனும் என்றானும், Endraanum - எக்காலத்திலும் அவுணர்க்கு, Avunarkku - அசுரர்கள் விஷயத்திலே இரக்கம் இலாதவனுக்கு, Irakkam Ilaadhavanukku - இரக்கமில்லாதவனுமான எம்பெருமானுக்கு உறையும் இடம் ஆவது, Urayum Idam Aavathu - வாஸஸ்தான மெதுவென்றால்;-. இரு பொழில் சூழ், Iru Pozhil Soozh - பரந்த சோலைகளாலே சூழப்பட்டு நன்று ஆய புனல், Nandru Aaya Punal - நல்ல தீர்த்தங்களையுடைய நறையூர், Naraiyoor - திருநறையூரிலே நின்றான், Nindraan - நின்றவனும் திரு ஆலி, Thiru Aali - திருவாலியிலே இருந்தான், Irundhaan - வீற்றிருந்தவனும் குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே கிடந்தான், Kidandhaan - சயனித்தவனும் தடம் திகழ் கோவல் நகர், Thadam Thigazh Koval Nagar - தடாகங்களாலே விளங்குகின்ற திருக்கோவலூரிலே நடந்தாற்கு இடம், Nadandaarku Idam - உலகளந்த திருக்கோலமாக எழுந்தருளியிருந்தவனுமான எம்பெருமானுக்கு இடமான மா மலை ஆவது நீர்மலை, Maa Malai Aavadhu Neermalai - சிறந்த மலையான திருநீர் மலையாம். |