திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1083 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1083பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷ்யம் அளவுபட்டு ரஷகத்வமே விஞ்சி இருக்கிறவன் –இப்படி தான் சர்வ ரஷகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் –நீரார் பேரான் –நீர் -என்று நீர்மையாய்-அத்தால் ஸ்வாபாவமாய் -அதாகிறது சேஷித்வமாய்-ஆக ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தவஸ்துவும் தனக்கு பிரகாரமாய் தான் ப்ரகாரியாய் இருக்கையாலே ஸ்ரீ நாராயணன் என்னும் திரு நாமத்தை உடையவன் –சர்வாதிகனான எம்பெருமானுக்கு ஸ்ரீ நீர் வண்ணன் என்று திரு நாமம் – என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக் காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப் பேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான், நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-6
பதவுரை Show / Hide
ஆர் பார் உலகும், Ar Paar Ulagum - விசாலமான பூலோகமும் (- (நீர்வண்ணனென்னும் திருநாமத்தை யுடையவனுமான) (இடம் மா மலை ஆவது நீர்மலையே))
பனி மால் வரையும், Pani Maal Varaiyum - குளிர்ந்தபெரிய மலைகளும்
கடலும், Kadalum - ஸமுத்ரங்களும்
சுடரும், Sudarum - சந்திர ஸூரியர்களும்
இவை, Ivai - ஆகிய இவற்றையடங்கலும்
உண்டும், Undum - அமுது செய்தும்
எனக்கு ஆராது என நின்றவன், Enakku Aaraathu Ena Nindravan - எனக்கு வயிறு நிறை வில்லையே! என்று சொல்லிக்கொண்டே யிருந்தவனும்
எம்பெருமான், Emperuman - எம்போலியர்க்கு ஸ்வாமியானவனும்
அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்பேரானை முனிந்த முனிக்கு அரையன், Alai Neer Ulakukku Arasu Aagi Apperaanai Munintha Munikku Arayan - கடல் சூழ்ந்த உலகத்துக்கு ராஜாக்களென்கிற அந்தப் பேரையுடைய க்ஷத்ரிய குலத்தைச் சீறிக்களைந்த பரசுராம முனிவரனாகத் தோன்றினவனும்
நுனக்கு பிறர் இல்லை எனும் எல்லையினான், Nunakku Pirar Illai Ennum Ellaiyinan - ‘உனக்கு மேற்பட்டாரொருவருமில்லை‘ என்னும்படியாகப் பெருமையின் எல்லையிலே நிற்பவனும்
நீர் ஆர் பேரான், Neer Aar Peeraan - நீர்வண்ணனென்னும் பேரான்
நெடு மால் அவனுக்கு, Nedu Maal Avanukku - ஸர்வேச்வரனுக்கு