திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1084 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1084பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் எதிரி என்று தோற்றினவனுடைய மார்வை இரண்டு கூறாம்படி பிளந்து பொகட்டவனுக்கு-ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் உடைய வார்த்தையாலே –முன்பு அவன் பண்ணின பராதி கூல்யத்தை எல்லாம் பொறுக்க வேணும் என்ன பொறுத்துப் போந்தான் – இனி இவன் இருக்கில் இவனுக்கு அநர்த்தம் என்னும் அளவில் பின்னை அழியச் செய்து விட்டான் ஆயிற்று என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
புகராருரு வாகிமுனிந்தவனைப் புகழ்வீட முனிந்துயி ருண்டு,அசுரன் நகராயின பாழ்பட நாமமெறிந்ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன், பகராதவ னாயிர நாமமடிப் பணியாதவ னைப்பணி யாமலரில், நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-7
பதவுரை Show / Hide
புகர் அர் உரு ஆகி, Pugar Ar Uru Aagi - (கண்ணபிரானான தன்னைப்போலவே சங்கு சக்கரங்களைச் செய்வித்துத் தரித்துக் கொண்டதனால்) ஒளிமிக்க உருவையுடையனாய்
முனிந்தவனை, Munindhavanai - (தன்மீது) கோபத்தைக் காட்டினவனான பௌண்ட்ரக வாஸுதேவனை
நாமம் பாழ்பட எறிந்து, Naamam Pazhpad Erinthu - பேருங்கூட அழந்துபோம்படியாக த்வம்ஸம் பண்ணினவனும்
அது அன்றியும், Adhu Andriyum - அது தவிரவும்,
வென்றி கொள் வாள், Vendri Kol Vaal - வெற்றி கொருந்திய வாளைத் துணையாகவுடையனாய்
ஆயிரம் நாமம் பகராதவன், Aayiram Naamam Bhakaradhavan - (தன்னுடைய) ஸஹஸ்ர நாமங்களில் ஒன்றையும் சொல்லாதவனாய்
புகழ் வீட முனிந்து, Pugazh Veeda Muninthu - (அவனுடைய புகழ் ஒழியும்படி சீறி
உயிர் உண்டு, Uyir Undu - (அவனது) பிராணனை அபஹரித்தவனும்
அசுரன், Asuran - ஆஸுரப்ரக்ருதியான அவனுடைய
நகர் ஆயின, Nagar Aayin - நகரங்களாக அமைந்திருந்த பல ஸ்தானங்களை
அடி பணியாதவன், Adi Paniyadhavan - திருவடிகளிலே வணங்காதவனாய்
அமரில் நிகர் ஆயவன், Amaril Nikar Aayavan - போர்புரிவதில் தன்னோடு ஒத்தவனாயிருந்த
அவுணனை, Avunai - இரணியரசுரனுடைய
நெஞ்சு, Nenju - மார்வை
பணியால், Paniyal - (ப்ரஹ்லாதனுடைய) சொல்நிமித்தமாக
இடந்தான் அவனுக்கு, Idanthan Avanukku - பிளந்தவனுமான எம்பெருமானுக்கு