திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1085 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1085பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்கள் பக்கலிலே அருளைப் பண்ண வேணும் என்று நெஞ்சு நெகிழ்ந்து ப்ரேமயுக்தராய் கொண்டு நாள் தோறும் அனுசந்திக்குமவர்கள்-நிச்சம் அருள் செய்யும் அவர்க்கு –மா மலையாவது நீர் மலையே என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
பிச்சச்சிறு பீலிபி டித்துலகில் பிணந்தின்மடவாரவர் போல்,அங்ஙனே அச்சமிலர் நாணில ராதன்மையால் அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய், நச்சிநம னாரடை யாமைநமக் கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு, நிச்சம்நினை வார்க்கருள் செய்யுமவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-8
பதவுரை Show / Hide
உலகில், Ulagil - இவ்வுலகத்திலே
பிச்சம் இது பீலி பிடித்து, Picham Ithu Peelipidithu - பிச்சங்களையுடையதாய்ச் சிறிதான மயிலிறகைக் கையிலே வைத்துக் கொண்டு (இருப்பவர்களான ஜைநர்கள்)
பிணம் தின்மடவார் அவர்போல் அங்ஙனே, Pinam Thinmadavaar Avarpol Anggane - பிணங்களைப் பிடுங்கித் தின்கிற பிசாச ஸ்த்ரீகளைப்போலே (திகம்பரர்களாய்த் திரிகையாலே)
அச்சம் இலர், Acham Ilir - பயமில்லாதவர்களாயும்
நாண் இலர் ஆதன்மையால், Naan Ilir Aadhanmaiyaal - வெட்கமில்லாதவர்களாயு மிருக்கையாலே
அவர், Avar - அப்படிப்பட்ட ஜைநர்களினுடைய
செய்கை, Seigai - நடத்தைகளை
வெறுத்து, Veruthu - வெறுத்துத் தள்ளிவிட்டு
அணி மா மலர்தூய், Ani Maa Malartthuuy - அழகிய சிறந்த புஷ்பங்களைக்கொணர்ந்து ஸமர்ப்பித்து
நச்சி, Nachchi - பக்திபண்ணி
நமனார் அடையாமை நமக்கு அருசெய் என, Namanar Adaiyaamai Namakku Aruseyi Ena - யமன் (எங்களைக்) கிட்டாதபடி (எமக்கு) அருள்புரியவேணும் என்று
உள் குழைந்து, Ul Kuzhaindhu - மனங்குழைந்து
ஆர்வமொடு, Aarvamodu - அன்புடனே
நிச்சம், Nicham - நித்யமாக
நினைவார்க்கு, Ninaivaarakku - அநுஸந்திக்கு மடியவர்களுக்கு
அருள் செய்யுமவற்கு, Arul Seyyumavarkku - கிருபைபண்ணுகிற எம்பெருமானுக்கு