திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1088 | பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ வித ரஷணம் பண்ணுமவன் -சர்வருக்கும் ஸ்ப்ருஹணீ யமாய் –தானே தாரகனுமாய்-பிரபல பிரதிபந்தகங்களை கேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை-என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை – இடர் பட்டு வரவும் பிற் பாடாகை அன்றிக்கே –இவன் இடர் பட்ட மடுவின் கரையிலே வந்து உதவினாப் போலே நான் நோவு படுகிற சம்சாரத்திலே -சம காலத்திலேயே –காணப் பெற்றேன் என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப் பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட
சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,
போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,
காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-1 | பதவுரை Show / Hideபார் ஆயது, Paar Aayadhu - உலகமாக வுள்ளவற்றை யெல்லாம் உண்டு, Undu - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து உமிழ்ந்த, Umizhndha - (பிரளயம் கழிந்தபிறகு) வெளிப்படுத்தினவனும் பவளம் துணை, Pavalam Thunai - பவழத்தூண் போலே விரும்பத்தக்கவனும் படு கடலில் அமுதத்தை, Padu Kadalil Amudhatthai - ஆழ்ந்த கடலிலுண்டான அமுதம்போலே போக்யனானவனும் பரி வாய் கீண்ட சீரானை, Pari Vaai Kiinda Seeranaai - குதிரை வடிவுடன் வந்த கேசியென்னுமஸூரனுடைய வாயைக் கிழித்தெறிந்த வீரலக்ஷ்மியையுடையவனும் எம்மானை, Emmaanai - எனக்கு ஸ்வாமியானவனும் தொண்டர் தங்கள் சிந்தை உள்ளே, Thondar Thangal Sindhai Ullae - அடியவர்களுடைய நெஞ்சினுள்ளே முளைத்து, Mulaiththu - தோன்றி எழுந்த, Ezhundha - அபிவிருத்தியடைகின்ற தீம் கரும்பினை, Theem Karumbinai - இனிய கரும்பு போன்றவனும் போர் ஆனை, Poar Aana - போர் செய்யவந்த குவலயாபீடமென்னும் யானையினுடைய கொம்பு, Kombu - தந்தங்களை ஒசித்த, Osiththa - முறித்தெறித்த போர் ஏற்றினை, Poar Aetrinai - யுத்தஸாமர்த்திய முள்ளவனும் புணர் மருதம் இற நடந்த, Punar Marudham Ira Nadandha - இரட்டை மருதமரங்கள் முறியும்படி தவழ்ந்தவனும் பொன் குன்றினை, Pon Kunrinai - பொன்மலை போல் அழகியவனும் கார் ஆனை இடர் கடிந்த, Kaar Aana Idar Kadintha - பெரிய கஜேந்தராழவானுடைய துன்பத்தைத் தொலைத்தவனும் கற்பகத்தை, Karppagaththai - கல்பவருக்ஷம்; போல ஸர்வ ஸ்வதானம் செய்பவனுமான எம்பெருமானை நான் கண்டது, Naan Kandhadhu - அடியேன் ஸேவிக்கப்பெற்றது (எவ்விடத்திலென்றால்) கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - ஸ்தலசாயிப் பெருமாளுடையதான திருக்கடல் மல்லையிலே |