திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1089 | பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்கு ஜனகனாய் எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி சீலவானாய் உள்ளவனை – காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே நோவு படுகிற சம்சாரத்திலே காணப் பெற்றேனே-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2 | பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி
மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-2 | பதவுரை Show / Hideஅவத்தம் பூண்டு, Avatham Poondhu - ஸ்வரூபத்தைக் கெடுக்கவல்ல காரியங்களை ஏறிட்டுக் கொண்டு (- (நான் கண்டது கடல்மல்லைத் தலசயனத்தே-)) பிறர்க்கு அடைந்து, Pirarkku Adaindhu - பிறரை(நீசர்களை) ஆச்ரயித்து தொண்டுபட்டு, Thondupattu - (அவர்களுக்கு)அடிமை செய்தும் பொய் நூலை, Poi Noolai - அபத்தங்களான பாஹ்யமதச்சுவடிகளை மெய்நூல் என்று, Mei Nool Endru - யதார்த்தமான சாஸ்த்ரமாகக் கொண்டு என்றும், Endrum - எப்போதும் ஓதி, Othi - (அந்தச் சுவடிகளையே) வாசித்துக்கொண்டிருந்து மாண்டு, Maandu - முடிந்து அவத்தம் போகாதே வம்மின், Avatham Pogaadhe Vammin - பாழாய்ப் போகாமல் (உஜ்ஜீவிக்க) வாருங்கள்; எந்தை, Endhai - எனக்குத் தந்தையானவனும் என் வணங்கப்படுவானை, En Vanangappaduvaanai - என்போல்வாரும் வணங்குதற்கு உரியவனும் கணங்கள் ஏத்தும், Kanangal Aethum - (ஞானிகளின்) கூட்டங்களாலே துதிக்கப்படுபவனும் நீண்ட அத்தை, Neenda Aththai - அளவிறந்த அப்படிப்பட்ட வஸ்துவாக உள்ளவனும் கரு முகிலை, Karum Mugilai - காளமேகம் போன்றவனும் எம்மான் தன்னை, Emmaan Thannai - அஸ்மத் ஸ்வாமியானவனும் நின்றவூர் நித்திலத்தை, Nindra Vuur Niththilaththai - திருநின்றவூரில் (எழுந்தருளியிருக்கிற) முத்துக்கோவை போலக் குளிர்ந்த வடிவையுடையவனும் தொத்து ஆர் சோலை காண்டவத்தை, Thoththu Aar Cholai Kaandavaththai - பூங்கொத்துகள் நிறைந்த சோலைகளையுடைய காண்டவவனத்தை கனல் எரிவாய் பெய்வித்தானை, Kanal Erivai Peyviththaanai - ஜ்வலிக்கிற அக்நியினுடைய வாயிலே புகுவித்தவனுமான பெருமானை |