திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1090 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1090பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ப்ராப்தி உபாயங்களில் பெரு நெறியாய் உள்ளவனை –ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில், தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும், கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. –2-5-3
பதவுரை Show / Hide
உலகு உய்ய, Ulaku Uyya - (ஸ்ரீமந்நாராயண னொருவனே மூன்று வடிவுகொண்டு காரியஞ் செய்கையாலே) (ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களாலே) உலகங்கள் வாழ்வதற்காக (- (நான் கண்டுகொண்டேன்..))
உடம்பு உருவில், Udam Bu Uruvil - சரீ ரசரீரிபாவத்தையிட்டுப் பார்க்குமளவில்
மூன்று ஒன்று ஆய், Moondru Ondru Aay - மூன்று தத்துவமும் ஒருபடியாய்
மூர்த்தி வேறு ஆய்நின்றானை, Moorthi Veeru Aayninraanaai - (உண்மையில்) ஸவ்ரூபம் வேறுபட்டு நிற்குமவனும்
அன்று, Andru - கண்ணனாகப் பிறந்த அக்காலத்து
பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய
விடம், Vidam - (முலையில் தடவியிருந்த) விஷத்தை
பருகு, Paruku - பானம்பண்ணின
வித்தகனை, Viththakanai - ஆச்சரீயபூதனும்
கன்று மேய்த்து விளையாட வல்லானை, Kanru Maeyththu Vilaiyaada Vallaanaai - கன்றுகளை மேய்த்து விளையாடுகைக்காக வந்து பிறந்தவனும்
வரை மீ கானில், Varai Mee Kaanil - மலைமேலுள்ள காடுகளிலே
தடம், Thadam - தடாகங்களிலே
பருகு, Paruku - (கன்றுகளுக்கு நீர் குடிக்கும் விதத்தைப் பயிற்றுவிக்கைக்காகத் தான் இறங்கிக் கையை முதுகிலே கட்டிக் கொண்டு) தண்ணீர் குடித்தவனும்
கரு முகிலை, Karum Mugilai - காளமேகம் போன்றவனும்
தஞ்சை கோயில், Thanjai Koyil - தஞ்சை மாமணிக்கோயிலிலே
தவம் நெறிக்கு ஓர் பெரு நெறியை, Thavam Nerikku Oru Peru Neriyai - தன்னைக் கிட்டுகைக்கான  உபாயங்களிலே சிறந்த  உபாயம் தானாக நிற்பவனும்
வையம் காக்கும், Vaiyam Kaakkum - உலகத்தைக் காப்பதற்காக
கடு பரி மேல் கற்கியை, Kadu Pari Mel Karkkiyai - கடுநடையுடைய குதிரையின் மேலே கல்கியவதாரம்  செய்யப்போகிறவனுமான எம்பெருமானை
கடி பொழில் சூழ் கடல் மல்லை தல சயனத்தே, Kadi Pozhil Soozh Kadal Mallai Thala Sayanatthae - மணம்மிக்க சோலைகள் சூழ்ந்த திருக்கடன் மல்லையிலே