திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1091 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1091பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக இருந்த செயலாலே லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை – எல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-தன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை அனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை – ரஷகன் என்று அறியப் பெற்றேன் –எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்- என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப் பிணைமருப்பில் கருங்களிற்றைப்  பிணைமான்னோக்கின், ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக் காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-4
பதவுரை Show / Hide
தாய், Thaai - தாய்வடிவையெடுத்துக் கொண்டு கொல்லவந்த (- (கடி பொழில் சூழ் கடன் மல்லைத் தலசயனத்தே கண்டு கொண்டேன்-.))
பேயை, Peyai - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
முலை, Mulai - (விஷந்தடவின) முலையை
உண்ட, Unda - உறிஞ்சியமுதுசெய்க
பிள்ளைதன்னை, Pillai Thannai - குமாரனும்,
பிணை மருப்பின் கரு களிற்றை, Pinai Maruppin Karu Kalittrai - இரண்டு கொம்பு முளைத்த கரிய யானைக்குட்டிபோல்  இனியவனும்,
மான் பிணை நோக்கின், Maan Pinai Nookkin - மான் பேடையின் நோக்குப் போன்ற நோக்கையுடைய
ஆய் தாயர், Aai Thaayar - இடைத்தாயரான யசோதையினுடைய
தயிர் வெண்ணெய், Thayir Vennai - தயிரிலும் வெண்ணெயிலும்
அமர்ந்த, Amarntha - ஊன்றியிருந்த
கோவை, Kovai - ஸ்வாமியும்,
அந்தணர் தம் அமுதத்தை, Andhanar Tham Amudhatthai - வைதிகர்களுக்குப் பரம யோக்யனும்,
முன்னே, Munnai - முன்பொருகால்
குரவை கோத்தானை, Kuravai Koththaanai - இடைப்பெண்களோடு ராஸக்ரிடை செய்தவனும்
குடம் ஆடு கூத்தன் தன்னை, Kudam Aadu Kooththan Thannai - குடக்கூத்தாடினவனும்
கோகுலங்கள் தளராமல், Kokulangal Thalaramal - (இந்திரன் பெய்வித்த பெருமழையினால்) பசுங்கூட்டங்கள்  வருந்தாதபடி
குன்றம் ஏந்தி, Kundram Aendhi - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி
காத்தானை, Kaathaanai - ரக்ஷித்தவனுமான
எம்மானை, Emmaanai - எம்பெருமானை