திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1094 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1094பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய் செவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும் துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும் காண வேணும் என்று தட்டித் திரிகிற நான் பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே காணப் பெற்றேன் – சாஸ்தரங்களிலே கேட்டு-ஒரு தேச விசேஷத்தால் சென்றால் காண இருக்கை அன்றிக்கே விடாய்த்த இந்நிலத்திலே காணப் பெற்றேன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
பேணாத வலியரக்கர் மெலியவன்று பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை, பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப் பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை, காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. –2-5-7
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்னொரு காலத்தில், (- (அவ்வரக்கர்களுடைய) (இன்று) (கடி பொழில் சூழ் கடன்மல்லைத்தலசயனத்தே கண்டுகொண்டேன்-.))
பேணாத, Penaadha - (தன்னை ஸர்வேச்வரனாக) மதியாத
வலி அரக்கர், Vali Arakkar - மிடுக்கையுடைய ராக்ஷர்கள்
மெலிய, Meliya - ஒழியும்படி
பெரு வரை தோள் இற நெரித்து, Peru Varai Thol Ir Neriththu - பெரிய மலைபோன்ற தோள்கள் முறியும்படி அழித்தவனும்,
அன்று, Andru - பிரஹ்லாதன் துன்பப்பட்ட அக்காலத்து
அவுணர் கோனை, Avunaar Konai - அசுரர் தலைவனான இரணியனுடைய
பூண் ஆகம் பிளவு எடுத்த, Poon Aagam Pilavu Edutha - ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மார்வைப் பிளந்தொழிந்தவனும்
போர் வல்லோனை, Por Vallonai - யுத்தத்தில்; ஸமர்த்வனானவலனும்
பொரு கடலுள் துயில் அமர்ந்த, Poru Kadalul Thuyil Amarntha - அலை யெறிகின்ற திருப்பாற் கடலிலே திருக்கண்  வளர்ந்தருள்பவனும்
புள் ஊர்தியை, Pul Oorthiyai - கருடப் பறவையை வாஹனமாக வுடையவனும்
பேய் முலை நஞ்சு, Pei Mulai Nanju - பூதனையின் முலையில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக உண்டான் தன்னை, Oon Aaga Undaan Thannai - உணவாகக் கொண்டு அமுது செய்தவனும்
உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை, Ulluvaar Ullaththae Uraikindraanai - தன்னைச் சிந்திப்பவர்களின் நெஞ்சிலே நித்யவாஸம் செய்பவனுமான எம்பெருமானை
காணாது திரி தருவேன், Kaanadhu Thiri Tharuven - (வெகு காலமாக) ஸேவியாமல் அலைந்து கொண்டிருந்த அடியேன்