திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1095 | பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே – இது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன் படபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,
என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-8 | பதவுரை Show / Hideபெண் ஆகி, Pen Aagi - மோஹினி யுருவமெடுத்து (- (கடி பொழில் சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே கண் ஆரக் கண்டுகொண்டேன்-.)) இன் அமுதம் வஞ்சித்தானை, In Amudham Vanchiththaanai - இனிய அமிருத்தை (அசுரர்கள் புஜிக்கவொண்ணாதபடி) வஞ்சித்தவனும் அன்று, Andru - முன்பொரு காலத்தில் பிறை எயிறு, Pirai Eiyiru - சந்திரனை யொத்த பற்களையுடைய அடல் அரிஆய், Adal Ariyaai - பலசாலியான நரஸிம்ஹமுர்த்தியாய் பெருகினானை,, Peruginanai - வளர்ந்தவனும், தண் ஆர்ந்த வார் புனல் சூழ், Than Aarntha Vaar Punal Soozh - குளிர்த்தி பொருந்திப் பெருகுகின்ற ஜலத்தாலே சூழப்பட்ட மெய்யம் என்னும், Meiyyam Ennum - திருமெய்யமென்கிற தடவரைமேல், Thadavarai Mel - பெரிய திருமலையின்மீது பணங்கள் மேவி கிடந்தானை, Panangal Mevi Kidandhaanai - (திருவனந்தாழ்வானுடைய) படங்களின் கீழே பொருந்திப் பள்ளி கொண்டிருப்பவனும் எண்ணானை, Ennaanai - (யோகிகளால்) சிந்திக்கப்படுமவனும் எண் இறந்த புகழினானை, En Irandha Pugazhinaanai - கணக்கில்லாத கீர்த்திகளையுடையவனும் இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை, Ilangu Oli Ser Aravindham Poonru Neenda Kannaanai - மிக்க ஒளியையுடைய தாமரையிதழ்போலே நீண்ட திருக்கண்களையுடையவனுமான எம்பெருமானை |