திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1098 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரயோஜனாந்த பரராய் –தன்னை உகவாது இருப்பாருக்கும் கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்- நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற இந்நீர்மையை அனுசந்தியாதே புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை ஒரு வஸ்துவாக நினைத்து இரோம் என்கிறார்- கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது அஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்-மஹா மதிகள் என்று – நித்ய சூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே – இது என்ன நீர்மை இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது – இது செய்யாதே இருப்பாரை – அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று- கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே-அவ்வளவிலும் எண்ணோம் –என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு, வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார், மருவினிய
தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை,
எண்ணாதே யிருப்பாரை யிறைப்பொழுது மெண்ணோமே. –2-6-1 | பதவுரை Show / Hideபெண் ஆகி, Pen Aagi - மோஹிநிபவதாரமெடுத்து, (- (அவர்களை வஞ்சித்துவிட்டு)) நண்ணாத வாள் அவுணரிடைபுக்கு, Nannaadha Vaal Avunaridhaipukku - பிரதிகூலர்களான அசுரர்களின் நடுவே புகுந்து வானவரை அமுது ஊட்டும் பெருமானார், Vaanavarai Amuthu Oottum Perumaanar - தேவர்களுக்குமாத்திரம் அமுதமனித்த ஸ்வாமியாயும், மருவ இனிய, Maruva Iniya - பொருந்தி வாழ்வதற்குப் பாங்கான தண் ஆர்ந்த, Than Aarntha - குளிர்ந்திநிரம்பிய கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லை யென்னும் திருப்பதியில் உறைவாரை, Uraivaaraik - நித்யவானம் செய்பவராயுமிருக்கிற ஸ்தலசாயிப்பெருமாளை எண்ணாதே இருப்பாரை, Ennaadhe Irupaarai - சிந்தியாமலிருப்பவர்களை இறைபொழுதும், Iraipozhudhum - அற்பகாலமும் எண்ணோம், Ennom - ஒரு பொருளாக நினைக்கமாட்டோம். |