திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1099 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1099பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் – அவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை – ந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே நமக்கு இனி இழக்க வேண்டாதபடி சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை ஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள் என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்- நமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை நமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே – மாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில் பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை கீழ்ப் பாட்டில் அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –-இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் – அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள வுரியார் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
பார்வண்ண மடமங்கை பனிநன்மா மலர்க்கிழத்தி, நீர்வண்ணன் மார்வகத்தி லிருக்கையைமுன் நினைந்தவனூர், கார்வண்ண முதுமுந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம், ஆரெண்ணும் நெஞ்சுடையா ரவரெம்மை யாள்வாரே. –2-6-2
பதவுரை Show / Hide
பார்வண்ணம் மடம் மங்கை, Paarvannam Madham Mangai - ஆத்மகுணங்கள் நிறைந்த பூமிப்பிராட்டியும் (- (அதற்குப்பிறகு))
பனி நல் மா மலர் கிழத்தி, Pani Nal Maa Malar Kizhaththi - குளிர்ந்த சிறந்த தாமரை மலரில் தோன்றிய  ஸ்ரீதேவியும்
நீர் வண்ணன், Neer Vannaan - கடல்வண்ணனான எம்பெருமானுடைய
மார்வு அகத்தில், Maarvu Agathil - திருமார்பிலும் இடப்பக்கத்திலும்
இருக்கையை, Irukkaiyae - எழுந்தருளியிருக்கும் படியை
முன் நினைந்து, Mun Ninaindhu - முந்துற அநுஸந்தித்து
அவன் ஊர், Avan Oor - அப்பெருமானெழுந்தருளி யிருக்குமிடமாகிய
கார் வண்ணம் முது முந்நீர் கடல்மல்லை தலசயனம், Kaar Vannam Muthu Munnir Kadalmallai Thalasayanam - கரிய கடலின் கரையிலேயுள்ள திருக்கடல்மல்லைத் திருப்பதியை
எண்ணும் நெஞ்சு உடையார் ஆர், Ennum Nenju Udaiyaar Aar - சிந்திக்கவல்ல மனமுடையவர்கள் எவரோ
அவர் எம்மை ஆள்வார், Avar Emmai Aalvaar - அப்படிப்பட்ட பாகவதர்கள் அடியோகங்களை அடிமை கொள்ளத்தக்கவர்கள்.