திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1100 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருதலைக் காமமாய் போகாமே இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும் நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் – அவர்கள் ஆளாத போது வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | ஏனத்தி னுருவாகி நிலமங்கை யெழில்கொண்டான்,
வானத்தி லவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத் துறைகின்ற,
ஞானத்தி னொளியுருவை நினைவாரென் நாயகரே. –2-6-3 | பதவுரை Show / Hideஏனத்தின் உரு ஆகி, Eanathin Uru Aagi - வராஹரூபியாய்த் திருவவதரித்து நிலம் மங்கை, Nilam Mangai - பூமிப்பிராட்டியை எழில், Ezil - (முன்னிருந்த அழகு சிறிதும் குறையாமல்) அவ்வழகுடனே கொண்டான், Kondaan - (அண்டபித்தியில் நின்றும்) மீட்டுக்கொணர்ந்தவனும், வானத்திலவர், Vaanaththilavar - தேவர்கள் மகிழ்ந்து, Magizhndhu - ஆநந்தத்துடனே முறையால், Murayal - தங்கள் தங்கள் அதிகாரத்திற்குத் தகுதியாக ஏத்தி, Aethi - துதிக்க வலம் கொள்ள, Valam Kolla - பிரதக்ஷிணம் செய்வதற்குப் பாங்காக, கானத்தின் கடல்மல்லை தலசயனத்து உறைகின்ற, Kaanaththin Kadalmallai Thalasayanaththu Uraikindra - காட்டினிடையேயிருக்கிற திருக்கடல்மல்லையிலெழுந்தருளியிருப்பவனும், ஞானத்தின் ஒளி உருவை, Gnanaththin Oli Uruvai - ஞானலொளிபொருந்திய திருமேனியையுடையவனுமான பெருமானை நினைவார், Ninaivaar - சிந்திக்கும் பாகவதர்கள் என் நாயகர், En Naayakar - அடியேனுக்குத் தலைவராவர். |