திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1102 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குத்ருஷ்டிகள் சொல்லுகிறவற்றை ஆஸ்ரயித்து வர்த்தியாதே –ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை – ஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற தேசம் –அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை – கர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே-நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே ஆசையின் கார்யம் தொழ வேண்டும் என்று தோற்றும்படி இருக்கை – திரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி- என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | பிச்சச் சிறுபீலிச் சமண்குண்டர் முதலாயோர்,
விச்சைக் கிறையென்னு மவ்விறையைப் பணியாதே,
கச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,
நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே. –2-6-5 | பதவுரை Show / Hideபிச்சம் சிறு பீலி, Picham Siru Peeli - (மயிலிறகுகளினால் செய்யப்பட்ட) குடையையும் சிறிய விசிறியையு முடைய சமண் குண்டர் முதலாயோர், Saman Gundar Mudhalaayor - நீசரான சமணர் முதலானவர்கள் விச்சைக்கு இறை என்னும், Vichchaikku Irai Ennum - ஸர்வஜ்ஞனென்று சொல்லிக் கொண்டாடுகிற அவ் இறையை, Av Iraiyai - அந்த அமணச்சாமியை பணியாதே, Paniyadhe - பணியாமல். கச்சி கிடந்தவன் ஊர் கடல்மல்லை தலசயனம் நச்சி தொழுவாரை, Kacchi Kidandhavan Oor Kadalmallai Thalasayanam Nachchi Thozhuvaarai - கச்சியில் (திருவெஃகாவில்) பள்ளி கொள்ளும் பெருமானது திவ்யதேசமாகிய திருக்கடல் மல்லையை விரும்பித் தொழுகின்ற பாகவதர்களை என் தன் நல் நெஞ்சே!, En Than Nal Nenje - எனது நல்ல நெஞ்சமே! நச்சு, Nachchu - நீ விரும்பித்தொழு. |