திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1103 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே சுழிக்கும் நெஞ்சு உடையவர்களை மட நெஞ்சே––வலம் கொள் – நமக்கு அவர்கள் நின்ற நிலை போராதுஅவர்கள் பக்கல் அநுவர்த்தநத்திலே அந்வயிக்க வேணும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | புலன்கொள்நிதிக் குவையோடு புழைக்கைமா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும் சுமந்தெக்கும் நான்றொசிந்து,
கலங்களியங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்,
வலங்கொள்மனத் தாரவரை வலங்கொள்ளென் மடநெஞ்சே. –2-6-6 | பதவுரை Show / Hideபுலன் கொள், Pulan Kol - இந்திரியங்களைக் கவர்கின்ற (மநோஹரமான) நிதி குவையோடு, Nidhi Kuvaivodu - பொற்குவியல்களையும் புழை கை மா களிறு இனமும், Puzhai Kai Maa Kaliru Inamum - துதிக்கையையுடைய பெரிய யானைக் கூட்டங்களையும் நலம் கொள் நவமணி குவையும், Nalam Kol Navamani Kuvaikum - நல்ல நவரத்னக் குவியல்களையும் சுமந்து, Sumandhu - தாங்கிக்கொண்டு நான்று ஒசிந்து, Naantru Osindhu - (ஏறின சரக்குகளின் கனத்தாலே) மிகவும் உள்ளழிந்து கலங்கள், Kalangal - கப்பல்களானவை எங்கும், Engum - பார்த்தவிடமெங்கும் இயங்கும், Iyankum - ஸஞ்சரிக்கப்பெற்ற மல்லை, Mallai - பெருமையையுடைத்தான கடல், Kadal - கடலின் கரையிலுள்ள மல்லைத் தலசயனம், Mallai Thalasayanam - மல்லாபுரியை வலம் கொள் மனத்தாரவரை, Valam Kol Manaththaravarai - பிரதிக்ஷணம் பண்ணவேணுமென்கிற விருப்பமுடைய பாகவதர்களை, என் மட நெஞ்சே, En Mada Nenchae - எனக்கு விதேயமான மனமே! வலம் கொள், Valam Kol - நீ அநுவர்த்திப்பாயாக. |