திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1104 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த ஸ்ரீ திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற ஸ்ரீ நாயனாரையும் தேடி இராதே தொழுவார்கள் உத்தேச்யராய் தொழு என் தூய் நெஞ்சே –ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7 | பஞ்சிச் சிறுகூழை யுருவாகி, மருவாத
வஞ்சப்பெண் நஞ்சுண்ட அண்ணல்முன் நண்ணாத,
கஞ்சைக் கடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே. –2-6-7 | பதவுரை Show / Hideபஞ்சி சிறு கூழை உரு ஆகி, Panjji Siru Kuzhai Uru Aagi - பஞ்சுபோலே மிருதுவாய் சிறிதான மயிர்முடியையுடையளான யசோதைப் பிராட்டியின் உருவெடுத்துக் கொண்டு (வந்தவளும்) மருவாத வஞ்சம் பெண் நஞ்சு, Maruvatha Vancham Pen Nanju - நெஞ்சில் இரக்கமற்றவளும் வஞ்சகமுடையவளுமான பூதனையென்னும் பேய்மகளினுடைய (முலையில் தடவியிருந்த) விஷத்தை உண்ட அண்ணல், Unda Annal - அமுது செய்த ஸ்வாமியும், முன், Mun - முன்னொருகால் நண்ணாத நஞ்சை கடந்தவன், Nannaadha Nanjai Kadandhavan - தன்னிடத்து அன்பு கொள்ளாமலிருந்த கம்ஸனை வென்று முடித்தவனுமான பெருமானுடைய ஊர், Oor - திவ்ய தேசமாகிய கடல்மல்லை தலசயனம், Kadalmallai Thalasayanam - திருக்கடன்மல்லையை நெஞ்சில் தொழுவாரை, Nenjin Thozhuvaarai - நெஞ்சாரத் தொழுகின்ற பாகவதர்களை என் தூய் நெஞ்சே, En Thoo Nenchae - எனது பரிசுத்தமான மனமே! தொழுவாய், Thozhuvaai - நீ தொழக்கடவை. |