திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1105 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1105பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம்படியான நெஞ்சை யுடையாரை – அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் நெஞ்சே உனக்கு யாத்ரை – பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
செழுநீர் மலர்க்கமலம் திரையுந்த வன்பகட்டால், உழுநீர் வயலுழவ ருழப்பின்முன் பிழைத்தெழுந்த, கழுநீர் கடிகமழும் கடன்மல்லைத் தலசயனம், தொழுநீர் மனத்தவரைத் தொழுவாயென் தூயநெஞ்சே. –2-6-8
பதவுரை Show / Hide
உழுநீர் வயல், Uzhu Neer Vayal - எப்போதும் உழுதுகொண்டேயிருக்க வேண்டும்படியான இயற்கையுடைய கழனிகளிலே (- (என் தூய் நெஞ்சே! தொழுவாய்-.))
உழவர், Uzhuvar - க்ருஷி பண்ணுகிற உழவர்கள்.
செழு நீர் திரை, Sezhu Neer Thirai - அழகிய நீரின் அலைகளையும்
கமலம் மலர், Kamalam Malar - தாமரை மலர்களையும்
உந்து, Undhu - தள்ளுகிற
வல் பகட்டால், Val Pagattal - வலிய எருதுகளைக்கொண்டு
உழ, Uzha - உழுதல் செய்ய,
பின் முன், Pin Mun - பின்னும் முன்னும்
பிழைத்து எழுந்த, Pizhaithu Ezhuntha - உழவுக்குத் தப்பி யெழுந்த
கழுநீர், Kazhunir - செங்கழுநீர் மலர்களினுடைய
கடி கமழும், Kadi Kamazhum - பரிமளம் வீசப்பெற்ற
கடல்மல்லை தலசயனம், Kadalmallai Thalasayanam - திருக்கடல்மல்லையை
தொழுநீர் மனத்தவரை, Thozhunir Manaththavarai - வணங்குவதையே இயற்கையாகவுடைய நெஞ்சு படைத்த  பாகவதர்களை