திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1106 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை அனுசந்தித்து தொழும் நெஞ்சு உடையாரை – அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே-நெஞ்சே உனக்குத் தொழுகைக்கு விஷயம் அவர்கள் தாங்கள் கிடாய்- என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு,
இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்,விசும்பில்
கணங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம்,
வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே. –2-6-9 | பதவுரை Show / Hideபிணங்கள் அடு காடு அதனுள், Pinangal Adu Kaadu Adhanul - பிணங்களைச் சுடுகிற சுடுகாட்டிலே (- (என்தன் மட நெஞ்சே! வணங்கு-.)) நடம் ஆடு, Nadam Aadu - நடமாடுகின்ற பிஞ்ஞகனோடு, Pinjjanonodu - ருத்ரனோடுகூட இணங்கு, Inangu - பொருந்தி யிருக்கிற திரு சக்கரத்து எம்பெருமானார்க்கு இடம், Thiru Chakkarathu Emperumanarkku Idam - சக்ரபாணியான பெருமானுக்கு இடமானதும் விசும்பில் கணங்கள், Visumbil Kanangal - தேவ ஸமூஹங்கள் இயங்கும், Iyankum - வந்து ஸஞ்சரிக்கும் பெருமையுடையதுமான கடல் மல்லை தலசயனம், Kadal Mallai Thalasayanam - திருக்கடல் மல்லையை வணங்கும் மனத்தாரவரை, Vanangum Manaththaravarai - வணங்குதற்குரிய சிந்தை படைத்த பாகவதர்களை |