திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1108 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1108பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முதலிலே ஸ்ரீ பாற் கடலாய் அது தன்னை கோதாக்கி-அம்ருதமாய் –அவ் வம்ருதம் தானே கோதாம்படி பிறந்தவள் ஆயிற்று –வடிவு அழகாலும் பருவத்தாலும்-பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் – அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை- திருமுகம் என்று சமுதாய சோபை இறே அவளுக்கு சொல்லுகிறது – குவளை யங்கண்ணி –என்று அவயவ சோபையால் உண்டான ஏற்றம் சொல்லுகிறது இவளுக்கு – அவன் தன்னில் காட்டில் –அஸி தேஷணை-என்று அவள் கண்ணுக்கு உண்டான ஏற்றதோ பாதியும் போருமாயிற்று அவளில் காட்டில் இவள் கண்ணுக்கு உண்டான ஏற்றம் – அவள் மார்வை ஆசைப்பட்டாள் இவள் திருவடிகளை ஆசைப்பட்டாள் அவன் வாசி அறிந்தார் அவன் மார்வை ஆசைப் படுவார்கள் – அவளோடு கூடினவன் வாசி அறிந்தார் அவன் திருவடிகளை பற்றும் இத்தனை இறே – ஸ்ரீ கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே கை கழியப் போனாரும் பிழைக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையிலே வந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை செழுங்கட லமுதினிற் பிறந்த அவளும்,நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசைவி டாளால், குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லுநின் தாள்நயந் திருந்த இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-1
பதவுரை Show / Hide
இடவெந்தை எந்தைபிரானே, Idaventhai Endhaipirane - திருவிடவெந்தையி லெழுந்தருளி  யிருக்கிற எம்பெருமானே!,
திவளும் வெண்மதி போல் திருமுகத்து, Thivalum Venmathi Pol Thirumugaththu - ஒளிவிடாநின்ற வெளுத்த சந்திரனைப்போன்று அழகிய முகத்தை யுடையளாய்
அரிவை, Arivai - நித்ய யௌவனமுடையளாய்
செழு கடல் அமுதினில் பிறந்த, Sezhu Kadal Amuthinil Pirandha - செழுமை தங்கிய கடலில் அமுதத்தோடு கூடப் பிறந்தவளான
அவளும், Avalum - அந்த பெரியபிராட்டியாரும்
நின் ஆகத்து, Nin Aagathu - உனது திருமார்பிலே
இருப்பதும், Iruppadhum - எழுந்தருளியிருப்பதை
அறிந்தும் ஆகிலும், Arindhum Aagilum - (இப்பரகாலநாயகி) அறிந்திருக்கச்செய்தேயும்
ஆசை விடாள், Aasai Vidaal - (உன்னிடத்தில்) ஆசையை விடுகின்றிலள்;
குவளை அம்கண்ணி, Kuvazhai Amkanni - கருநெய்தல்போன்று அழகிய கண்ணையுடையவளும்
கொல்லி அம்பாவை, Kolli Ambavai - கொல்லி மலையிலுள்ள அழகிய பதுமை போன்றவளும்
நின் தாள் நயந்திருந்த, Nin Thaal Nayandhirundha - உனது திருவடிகளையே ஆசைபட்டுக் கொண்டிருப்பவளுமான
இவளை, Ivalai - இப்பெண் விஷயத்திலே
உன் மனத்தால் என் நினைந்திருந்தாய், Un Manathaal En Ninaindhirundhaai - என்ன செய்வதாக நீ நினைத்திருக்கிறாய்!
சொல்லு, Sollu - அதை வெளியிட்டருள்.