திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1109 | பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பின்னானார் வணங்கும் -என்கிறபடியே சொல்லு என்று கிரியை உண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –இருக்கும் ஸூ குமாரரைப் போலே அதிகமான சம்ச்லேஷம் விச்லேஷம் பொறுக்க மாட்டாத படியான ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும் படி -என்று – இவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2 | துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள்,
குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள்,
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள்,
இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-2 | பதவுரை Show / Hideமால் இனம் மொழியாள், Maal Inam Mozhiyal - தன்னுடைய வியாமோஹத்துக்குத் தகுதியான பேச்சையுடையளான இப்பெண்பிள்ளையானவள், (- (இடவெந்தை எந்தை பிரானே!- ;)) துளம்படு முறுவல், Thulampadu Muruvai - மாதுளம் விரைபோன்ற பற்களினின்றும் உண்டாகின்ற புன்சிரிப்பை தோழியர்க்கு, Thozhiyarkku - தன் தோழிமார்களை நோக்கி அருளாள், Arulal - அருள்கின்றாளில்லை; துணை முலை, Thunai Mulai - சேர்த்தியழகுடைய முலைகளை சாந்து கொண்டு, Santhu Kondo - சந்தனத்தாலே அணியாள், Aniyal - அலங்கரிக்கின்றாளில்லை குளம் படு குவளை கண் இணை, Kulam Padu Kuvalai Kan Inai - தடாகத்திலுள்ள (செவ்வி மாறாத) குவளை மலர் போன்ற கண்களில் எழுதாள், Ezuthal - மையிட்டுக்கொள்கிறாளில்லை; குழற்கு, Kuzharku - கூந்தலில் கோலம் நல் மலர் அணியாள், Kolam Nal Malar Aniayal - அழகிய சிறந்த புஷ்பங்களைச் சூட்டிக் கொள்ளுகிறாளில்லை வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும், Valam Padu Munnir Vaiyam Mun Alandha Maal Ennum - (ரத்னம் முதலிய) நற்சரக்குகளுக்கிடமான கடலால் சூழப்பட்ட பூமியை முன்னொருகால் அளந்த மால் ஸர்வேச்வரன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்; இளம் படி இவளுக்கு என் நினைந்திருந்தாய், Ilam Padi Ivalukku En Ninaindhirundhai - (விரஹம் பொறாத) ஸுகுமாரஸ்வபாவையான இவள் விஷயத்திலே என்ன செய்வதாகத் திருவுள்ளம்? |