திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1110 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1110பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நை வார்த்தைர் ந ச பூஷணை -என்னும்படி பண்ணுகைக்குகோ நீ இங்கே வந்து இருக்கிறது ஸ்ரீ ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம், போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும் பொருகடல் புலம்பிலும் புலம்பும், மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறைநில்லா, என்தன் ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-3
பதவுரை Show / Hide
சாந்தமும், Santhamum - கலவைச் சந்தனத்தையும் (- (இடவெந்தை யெந்தை பிரானே!-;))
பூணும், Poonum - முத்துவடத்தையும்
சந்தனும் குழம்பும், Sandhanum Kuzhampum - குழம்பான சந்தனத்தையும்
தட முலைக்கு அணியிலும், Thada Mulaiyilum - (இவள் தனது) பெரிய முலைகளில் அணிந்து கொண்டாலும்
தழல் ஆம், Thazhal Aam - (அவையெல்லாம்) நெருப்பாகவேயிரா நின்றன;
போந்த, Pontha - வெளிவந்து தோன்றின
வெள் திங்கள், Vel Thingal - வெளுத்த சந்திரனுடைய
கதிர், Kathir - கிரகணங்களானவை
சுட, Suda - (நெருப்புப்போல்) தஹிக்க
மெலியும், Meliyum - (அதனாலே) நோவுபடா நின்றாள்;
பொரு கடல், Poru Kadal - அலையெறிகின்ற கடலானது
புலம்பில், Pulambil - கோஷம் செய்யத் தொடங்கினால்;
புலம்பும், Pulambum - (இவளும்) கூக்குரலிடா நின்றாள்;
மாந்தளிர், Manthalar - மாந்தளிர்போன்ற
மேனி வண்ணமும், Meni Vannamum - (இவளது) உடம்பின் நிறமும்
பொன் ஆம், Pon Aam - பசலைநிறமாக மாறிவிட்டது;
வளைகளும், Valaigalum - கையில் வளைகளும்
இறை, Irai - சற்றேனும்
நில்லா, Nilla - தங்குகின்றில்
என்தன் ஏந்து இழை இவளுக்கு, Enthan Aendhu Izhai Ivalukku - எனது பெண்பிள்ளையாகிய இவள் விஷயத்திலே
என் நினைந் திருந்தாய், En Ninainthirundhai - என்ன செய்வதாகத் திருவுள்ளம்;