திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1111 | பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏழை-கிடையாதது தூர நின்றால் கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள் இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் – இடவெந்தை –உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும் ஒண்சுடர் துயின்றதால் என்னும்,
ஆழியும் புலம்பும். அன்றிலு முறங்கா தென்றலும் தீயினிற் கொடிதாம்,
தோழியோ. என்னும் துணைமுலை யரக்கும் சொல்லுமி னென்செய்கேன் என்னும்,
ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-4 | பதவுரை Show / Hideநாழிகை ஊழியின் பெரிது என்னும், Nazhigai Oozhiyin Peridhu Ennum - ‘ஒரு நாழிகைப் பொழுதானது ஒரு கல்பத்தைக் காட்டிலும் நெடிது என்கிறாள்; (- (இடவெந்தை எந்தை பிரானே-; (இப்பெண்பிள்ளையானவன்).) (என் நினைத்திருந்தாய்!-.)) ஒண் சுடர் துயின்றது என்னும், On Sudar Thuyinrathu Ennum - ‘ஸூர்யன் செத்துப் போய் விட்டான்’ என்கிறாள்; தோழி, Thozhi - ‘அடீ ஸகியே!’ (என்று தோழியை அழைத்து அவளிடம் என்ன சொல்லுகிறாளென்னில்;) ஆழியும் புலம்பும், Azhiyum Pulambum - ‘ஸமுத்ரமோ கோஷதட செய்யாநின்றது; அன்றிலும் உறங்கா, Andrilum Urangaa - அன்றிற்பறவையோ உறங்குகிறதில்லை; தென்றலும் தீயினில் கொடிது ஆம், Thendralum Theeyinil Kodidhu Aam - தென் திசைக்காற்றோ நெருப்பைவிட தீக்ஷ்ணமாயிருக்கின்றது ஓ, O - ஐயோ! (என்ன பண்ணுவேன்) என்னும், Ennum - என்று சொல்லாநின்றாள்; துணை முலை அரக்கும், Thunai Mulai Arakkum - ‘இரண்டு முலைகளையும் வேரோடே பிடுங்கி யெறிப வள் போலேயிராநின்றாள் என் செய்கேன் சொல்லுமின் என்னும், En Seigain Sollumin Ennum - ‘இரண்டு முலைகளையும் வேரோடே பிடுங்கி யெறிபவள் போலேயிராநின்றாள்(இப்படிப்பட்ட கஷ்டங்களுக்கு) என்ன பரிஹாரம் பண்ணுவேன், சொல்லுங்கள்’ என்று (அடிக்கடி) சொல்லாநின்றாள்; ஏழை, Ezhaik - மிகவும் சாபல்ய முடையளான என் பொன்னுக்கு, En Ponnukku - எனது பெண்மகள் விஷயத்திலே |