திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1113 | பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –என்று மோஹிக்கும்- நம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்- அணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும் இவளுடைய-வை வர்ண்யமும்-அத்யாவச்யமும்-செல்லாமையும்-வடிவு அழகும் பிறப்பும் இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ- இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே ஸ்ரீ திருவிடவெந்தையில் இருப்பு – உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே – உம்முடைய வைவர்ண்யம் தோற்ற ஸ்ரீ திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர் இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | தன்குடிக் கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயி லிலங்கை,
வன்குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தைகேட் டின்புறும் மயங்கும்,
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி மென்முலை பொன்பயந் திருந்த,
என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-6 | பதவுரை Show / Hideதன் குடிக்கு தக்க ஆ, Than Kudikku Thakka Aa - தனது குலமரியாதைக்குத் தகுந்தபடியை (- (இடவெந்தை எந்தை பிரானே!;) (இப்பெண்பிள்ளையானவள்)) ஏதும் நினையாள், Edhum Ninaial - சிறிதும் ஆராய்கின்றிலள்; தட கடல், Thada Kadal - பெரிய கடலோடும் நுடங்கு எயில், Nudangu Eiyil - வளைந்த மதிளோடும் கூடின இலங்கை, Ilankai - இலங்கையிலிருந்த வல்குடி, Valkudi - வலிய ராக்ஷஸகுலமானது. மடங்க, Madanga - அழியும்படி வாள் அமர்தொலைத்த வார்த்தை கேட்டு, Vaal Amartholaittha Vaarthai Kettu - கொடிய போர்க்களத்திலே ஒழித்த செய்தியைக் கேட்டு இன்புறும், Inpurom - (ஒரு பிராட்டிக்காக இவ்வளவு காரியம் செய்வதே! என்று) ஈடுபடாநின்றாள்; மயங்கும், Mayangum - (அப்பிராட்டிக்குப்போல நமக்கும் ஒரு காரியம் செய்வதில்லையே! என்று வருந்தி) மூர்ச்சிக்கின்றாள்; மின்கொடி மருங்குல் சுருங்க, Minkodi Marungul Surunga - மின்னலும் வஞ்சிக்கொடியும் போன்ற இடையானது நுடங்கும்படி மென் முலை, Men Mulai - மெல்லிய முலைகளானவை மேல் நெருங்கி, Mel Nerungi - மார்பின்மேலே (ஒன்றோடொன்று ) நெருக்கமுற்று பொன் பயந்திருந்த, Pon Payandhirundha - பசலை நிறமுடைத்தாம்படியிருக்கின்ற என் கொடி இவளுக்கு, En Kodi Ivalukku - எனது இப்பெண்பிள்ளை திறத்திலே என் நினைந்திருந்தாய், En Ninaindhirundhai - என்ன செய்வதாகத் திருவுள்ளம்? |