திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1115 | பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம் தசை இருந்த படியாலே ஸ்ரீ திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ யென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு சொல்லுமா போலே சொல்லா நின்றாள் – ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில் நீர் நினைத்து இருக்கிறது என்- என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும்,
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி,
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-8 | பதவுரை Show / Hideஅலம் கெழு தடகை ஆயன் வாய் ஆம்பற்கு என் உள்ளம் அழியும் என்னும், Alam Kezhu Thadakai Aayan Vaai Aambarku En Ullam Azhiyum Ennum - ‘கலப்பை விளங்குகின்ற பெரிய திருக்கையை யுடையனான கோபால க்ருசணனுடைய திருப்பவளத்தில வைத்து ஊதுகிற இலைச்சூழலோசைக்கு என்னெஞ்சு அழிகின்றது’ என்கிறாள்; (- (இடவெந்தை எந்தை பிரானே!-;) (என் நினைந்திருந்தாய்!-.)) புலம் கெழு, Pulam Kezhu - மநோஹரமான பொரு நீர், Poru Neer - அலையெறிகின்ற நீர்ப்பெருக்கையுடைய புட்குழி, Putkuzhi - திருப்புட்புழி விஷயமாக பாடும், Paadum - பாட்டுகள் பாடாநின்றாள்; நீர்மலைக்கு போதுமோ என்னும், Neermalaikku Podhumo Ennum - திருநீர்மலைக்குப் போவோமென்கிறாள்; குலம் கெழு கொல்லி கோமள வல்லி, Kulam Kezhu Kolli Komala Valli - மிகச்சிறந்த கொல்லி மலையிலுள்ள பாவை போன்றவளும் கொடி இடை, Kodi Idai - வஞ்சிக்கொடிபோன்ற இடையையுடையவளும் நெடு மழை கண்ணி, Nedu Mazhai Kanni - பெருமழைபோலே நீர்த்தாரைகள் பெருகப்பெற்ற கண்களை யுடையவளும் இலங்கு எழில் தோளிக்கு, Ilangu Ezhil Tholikku - விளங்குகின்ற அழகிய தோள்களையுடையவளுமான இப்பெண்பிள்ளை திறத்திலே |