திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1116 | பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாய் கைவிடுதல் தான் கை விடுதல்-செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக ஸ்ரீ திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர் -உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் – வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி – ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள் பொருகயல் கண்துயில் மறந்தாள்,
அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ ணங்கினுக் குற்றநோ யறியேன்,
மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி வீங்கிய வனமுலை யாளுக்கு,
என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-9 | பதவுரை Show / Hideமெல் தோள், Mel Thol - மென்மைதங்கிய தோள்களானவை (- (இடவெந்தை யெந்தை பிரானே!-;) (இப்பெண்பிள்ளையினுடைய)) பொன் குலாம் பயலை புத்தன, Pon Kulam Payalai Puththan - பொன்னிறமென்று சொல்லத்தக்க பசலை நிறத்தைக் கொண்டன; பொரு கயல் கண் துயில் மறந்தாள், Poru Kayal Kan Thuyil Marandhaal - ஒன்றோடொன்று போர் செய்கிற இரண்டு மீன்கள் போன்ற கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்; உன் மேல், Un Mel - உன் விஷயத்திலே அன்பினால், Anbinai - ஆசையினாலே ஆதரம் பெரிது, Aadaram Peridhu - ஆதரவு பெருகிச் செல்லுகின்றது; இவ் அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன், Iv Ananginukku Utra Noi Ariyen - இப்பெண்ணுக்கு உண்டான வியாதியை அறிகின்றே னில்லை; மின் குலாம் மருங்குல் சுரங்க, Min Kulam Marungul Suranga - மின்னல்போன்று கொண்டாடத்தக்க இடையானது துவளும்படியாக மேல் நெருங்கி, Mel Nerungi - மார்பின்மேலே ஒன்றோடொன்று நெருக்கமுற்று வீங்கிய, Veengiya - வளர்ந்துவாராநின்ற வனம் முலையாளுக்கு, Vanam Mulaiyalukku - அழகிய முலைகளையுடையளான இம்மகளுக்கு என் ஆம் கொல், En Aam Kol - என்ன ஆகுமோ! குறிப்பில் என் நினைந்திருந்தாய், Kurippil En Ninaindhirundhai - (இவளைப்பற்றித்) திருவுள்ளத்தில் என்ன நினைத்திருக்கிறாய்?. |