திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1117 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1117பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக ஸ்ரீ திருவிடவெந்தையில் வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று – இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள் தாம் மோஹிப்பது உணர்வதாக திருத் தாயார் கூப்பிடுவதாக வேண்டாதபடி பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆயஎம் மாயனே !அருளாய், என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை, மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள், பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே! –2-7-10
பதவுரை Show / Hide
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய, Annamum Meenum Aamaiyum Ariyum Aaya - “ஹம்ஸரூபியாகவும் மத்ஸ்யரூபியாகவும் கூர்மரூபியாகவும் நரஸிம்ஹரூபியாகவும் திருவவதரித்த
எம் மாயனே, Em Maayaney - எம்பெருமானே!
அருளாய் என்னும், Arulai Ennum - “கிருபை பண்ணவேணும்”. என்று பிரார்த்திக்கின்ற
இன் தொண்டர்க்கு, In Thondarkku - பரமபக்தர்களுக்கு
இன் அருள் புரியும், In Arul Puriyum - பரம க்ருபையைச் செய்தருள்கின்ற.
இடவெந்தை எந்தைபிரானை, Idaventhai Endhaipiraanai - திருவிடவெந்தைப் பெருமான் விஷயமாக,
மன்னு மா மாடம் மங்கையர்தலைவன், Mannu Maa Maadam Mangaiyarthalaivan - சாச்வதமான பெரிய மாடங்களையுடைய திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
மானம் வேல், Maanam Vel - சிறந்த வேலாயுதத்தையுடையவருமான
கலியன், Kaliyan - ஆழ்வார்
வாய் ஒலிகள் பன்னிய, Vaai Oligal Panniya - விஸ்தரித்த அருளிச்செய்த
பனுவல், Panoval - இப்பாசுரங்களை
பாடுவார், Paaduvaar - பாடுமவர்கள்
நாளும், Naalum - எந்நாளும்
பழ வினை பற்று அறுப்பார், Pazha Vinai Patru Aruppaar - கல்மஷ ஸம்பந்தமற்றிருப்பர்கள்.