திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1124 | பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவ் ஒப்பனை அழகைக் கொண்டு ஸ்ரீ பரமபததில் இருக்கிறேன் என்று கூச வேண்டா உனக்காக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-ஏழாம் பாசுரத்தில்) 7 | முழுசிவண் டாடிய தண்டுழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும், மேனியஞ்சாந்
திழிசிய கோல மிருந்தவாறும் எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார்,
எழுதிய தாமரை யன்னகண்ணும் ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்,
அழகிய தாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-7 | பதவுரை Show / Hideவண்டு முழுசி ஆடிய, Vandu Muluci Atiya - வண்டுகள் (தேனிலே) முழுகிக் கூத்தாடா நிற்கப்பெற்ற (- (ஆர்கொல் என்ன—;) (அட்டபுகரத்தேன் என்றார்–.)) தண் துழாயின், Than Tulayin - குளிர்ந்த திருத்துழாயினால் மொய் மலர் கண்ணி இருந்த ஆறும், Moy Malai Kanni Irundha Aarum - செறியத் தொடுக்கப்பட்ட புமாலை சாத்தியிருக்கும் படியையும் மேனி அம் சாந்து இழுசிய கோலம் இருந்த ஆறும், Meeni Am Santhu Izhuchiya Kolam Irundha Aarum - திருமேனியிலே அழகிய சந்தனம் பூசப்பெற்ற அலங்கார மிருக்கும்படியையும் எங்ஙனம் சொல்லுகேன், Engganam Sollugeen - என்னவென்று சொல்லுவேன்; ஒவி நல்லார் எழுதிய, Ovi Nallaar Ezhudhiya - சித்ரமெழுதுவதில் வல்லவர்கள் எழுதினவை யென்னலாம் படியுள்ள தாமரை அன்ன கண்ணும், Thamarai Anna Kannum - தாமரை யிதழ்போன்ற திருக்கண்களும் ஏந்து எழில் ஆகமும், Ainthu Ezhil Aagamum - மிக்க அழகையுடையய திருமார்வும் தோளும், Tholum - திருத்தோள்களும் வாயும், Vaayum - திருப்பவளமும் அழகியது ஆம் இவர், Azhagiyadhu Aam Ivar - அழகியவாக அமையப்பெற்ற இவர் |