திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1128 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாம்தாம் கர்மத்தாலே கிலேசப்படுகிற பிராணிகளை தீம்பிலே கை வளர்ந்த பிரஜையை காலிலும் கழுத்திலும் விலங்கிட்டு வைக்கும் பித்ராதிகளைப் போலே இவற்றுக்கு ஹித ரூபமாக உபசம்ஹாரத்தை பண்ணும் ருத்ரனுக்கு அந்தர்யாமியாயும் ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் – பிரஜாபதிக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்துப் போருகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம் ஆகிறது- அவன் ஆஸ்ரயிக்கிற ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்-நல்ல நீர் நலம் சூழ்ந்து அழகியதாய் இருக்கிற ஸ்ரீ கச்சியில் – ஸ்ரீ திருக்கடல் மலை யாயிற்று படை வீடு-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை யூறொலி நாற்றமும் தோற்றமுமாய்,
நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
பல்லவன் வில்லவ னென்றுலகில் பல ராய்ப்பல வேந்தர் வணங்குகழற்
பல்லவன், மல்லையர் கோன்பணிநத பர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-1 | பதவுரை Show / Hideசொல்லுவன் சொல் பொருள் அவைதான் ஆய், Solluvan Sol Porul Avaithaan Aayi - ஸாமாந்ய சப்தங்களும் நித்யசப்தமான வேதமும் இவற்றின் பொருளுமாகிய இவை, தானேயாய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய், Suvai Ooru Oli Naatramum Thotramum Aayi - ரஸம் ஸ்பர்சம் சப்தம் கந்தம் ரூபம் ஆகிய பஞ்ச விஷயங்களும் தானேயாய் நல்அரன் நாரணன் நான்முகனுக்கு, Nalaaran Naarayanan Naanmuganukku - சிவனுக்கு தன்மையாலும் தானான பிரமனுக்கு அந்தர்யாமியாயிருந்து அந்தர்யாமியாயிருந்து கொண்டும் கொண்டும்லோகாரியங்களை நடத்துமவனான எம்பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடம் (ஏதுவென்றால்): தடம் சூழ்ந்து அழகாய் கச்சி, Thadam Soozhnthu Azhagai Katchi - தடாகங்கள் சூழப்பெற்று அழகு பொலிந்த காஞ்சீபுரியிலே, உலகில், Ulagil - இவ்வுலகத்திலே பல்லவன் வில்லவன் என்று பலர் ஆய் பலவேந்தர், Pallavan Villavan Endru Paler Aayi Palavendrar - பல்லவனென்றும் வில்லவனென்றும் பல பெயர்களாலே சொல்லக்கூடிய பல அரசர்களாலே வணங்கு கழல், Vanangu Kazhal - வணங்கப்பட்ட பாதத்தையுடையவனும் மல்லையர்கோன், Mallaiyarkon - மல்லாபுரியென்கிற திருக்கடல் மல்லையிலுள்ளார்க்குத் தலைவனுமான பல்லவன், Pallavan - பல்லவராஜன் பணிந்த, Panintha - கைகங்கரியம் செய்யப்பெற்ற பரமேச்சுர விண்ணகரம் அது, Paramechura Vinnakaram Adhu - பரமேச்வர விண்ணகரமென்கிற திவ்ய தேசமாம் |