திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1131 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1131பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி முன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
அண்டமு மெண்டிசை யும்நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா உண்டவன், எந்தைபி ரானதி டமொளி மாடங்கள் சூந்தழ காயகச்சி, விண்டவ ரிண்டைக்கு ழாமுடனே விரைந் தாரிரி யச்செரு வில்முனைந்து, பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-4
பதவுரை Show / Hide
அண்டமும், Andamum - அண்டங்களையும் (- (ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய உச்சி-.) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.))
எண் திசையும், En Thisayum - எட்டுத்திசைகளையும்
நிலனும், Nilanum - பூமியையும்
அலை நீரொடு, Alai Neerodu - கடல்களையும்
வான், Vaan - ஆகாசத்தையும்
எரி, Eri - அக்நியையும்
கால், Kaal - காற்றையும்
முதலா, Muthala - இவை முதலான மற்றும் பல பொருள்களையும்
உண்டவன், Undavan - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கின
எந்தைபிரானது, Endhaipiraanathu - எம்பெருமானுக்கு
இடம், Idam - இடமாவது,
பண்டு ஒருகால், Pandhu Orukaal - முன்னொரு காலத்தில்
செருவில், Seruvil - போர்க்களத்திலே
விரைந்தார், Viraindhaar - சண்டை செய்ய விரைந்து வந்தவர்களான
விண்டவர், Vintavar - பகைவர்கள்
இண்டை, Intai - நெருங்கின (தங்களது)
குழாமுடனே, Kuzhamudane - கூட்டங்களோடே
இரிய, Iriya - சிதறியோடும்படி
முனிந்து, Muninthu - சீறி
வளைத்தான், Valaiththan - வில்லைவளைத்தவனான பல்லவராஜன்
பணிந்த, Panintha - கைங்கரியம் செய்யப்பெற்ற