திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1132 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1132பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது – பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
தூம்புடைத் திண்கைவன் தாள்களிற்றின் துயர் தீர்த்தர வம்வெருவ,முனநாள் பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி, தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப் பச்செரு மேல்வியந் தன்றுசென்ற, பாம்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-5
பதவுரை Show / Hide
முன நாள், Muna Naal - முன்னொரு காலத்தில் (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி.) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.))
தாம்பு உடை திண்கை வன் தாள், Thambu Udai Thin Kai Van Thaal - துளையையுடைய துதிக்கையையும் வலியுள்ள காலையுமுடைய
களிற்றின், Kalittrin - கஜேந்திராழ்வானது
துயர், Thuyar - துன்பத்தை
தீர்த்து, Theerthu - போக்கினவனாயும்,
பும் புனல் பொய்கை, Pum Punal Poigai - அழகிய நீரையுடைய பொய்கையிலே
அரவம், Aravam - காளிய நாகம்
வெருவ, Veruva - அஞ்சும்படியாக
புக்கான் அவனுக்கு, Pukkan Avanukku - பாய்ந்தவனாயுமிருக்கிற எம்பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடமாவது,
தேம் பொழில் குன்று எயில் தென்னவனை, Them Pozhil Kunru Eyl Thennavanai - தேன் நிறைந்த சோலைகளையும் மலைபோன்ற மதிள்களையுடைய பாண்டிய நாட்டின் அரசன்
திசைப்ப, Thisaippa - அறிவு கலங்கும்படி
அன்று, Andru - முன்பு
செரு மேல், Seru Mel - போர்க்களத்திலே
வியந்து சென்ற, Viyandhu Senra - விருப்பத்துடனே போய்ச் சேர்ந்தவனும்
பாம்பு உடை, Paambu Udai - நாகத்தைக் கொடியாகவுடையவனுமான
பல்லவர் கோன், Pallavar Kon - பல்லவராஜன்
பணிந்த, Panintha - கிஞ்சித்கரிக்கப்பெற்ற