திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1133 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1133பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஹிரண்யன் உடலுக்கு வளையாத திரு உகிரை ஆயுதமாக உடைய நரசிம்ஹமாய் – பெரு மிடுக்கனான ஹிரண்யன் உடைய மார்வை யுத்தத்திலே புண் படும்படி -போழ்ந்த புனிதன் இடம் – பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
திண்படைக் கோளரி யினுரு வாய்த் திறலோனக லம்செரு வில்முனநாள், புண்படப் போழ்ந்த பிரானதிடம் பொரு மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி, வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த, பண்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-6
பதவுரை Show / Hide
முனநாள், Munanaal - முன்னொரு காலத்திலே (- (பல்லவர் கோன்–:) (பணிந்த-:) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.))
திண் படை, Thin Padai - கூர்மையான (நகங்களாகிற) ஆயதங்களையுடைய
கோள் அரியின் உரு ஆய், Kol Ariyin Uru Aai - வலிமிக்க நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி
செருவில், Seruvil - போர்க்களத்தில்
திறலோன் அகலம், Thiralon Akalam - மஹாபலசாலியான இரணியனது மார்வை
புண் பட போழ்ந்த, Pun Pada Pozhntha - புண்படும்படி கிழித்தெறிந்த
பிரானது, Piranathu - எம்பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடமாவது,
பொரு மாடங்கள் சூழ்ந்து, Poru Madangal Soozhndhu - ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்கள் நிறைந்திருப்பதனால்
அழகாய, Azhagaya - அழகுபொலிந்திருக்கிற
கச்சி, Kacchi - கச்சிப்பதியிலே,
வெண் குடை நீழல், Ven Kudai Neezhal - வெண் கொற்றக்குடையின் நிழலில் (வீற்றிருந்துகொண்டு)
செங்கோல் நடப்ப, Sengol Nadappa - தனது கட்டளை விலைச்செல்லும்;படி (அரசாண்டவனும்)
விடம் வெல் கொடி, Vidam Vel Kodi - பாம்பாகிற வெற்றிக்கொடியையும்
வேல் படை, Vel Padai - வேல் என்னு மாயுதத்தையும்
முன் உயர்த்த, Mun Uyarndha - சேனைகளின்முன்னே உயர எடுத்தவனும்
பண்பு உடை, Panbu Udai - நீதி தவறாதவனுமான