திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1134 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய் முன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு அளந்தவனுக்கு இடந்தான் ஸ்ரீ பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7 | இலகிய நீண்முடி மாவலி தன்பெரு வேள்வியில் மாணுரு வாய்முனநாள்,
சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மாமதிள் சூழ்கரு வூர்வெருவ,
பலபடை சாயவென் றான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-7 | பதவுரை Show / Hideமுன நாள், Muna Naal - முன்னொருகால், (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி–.) (பணிந்த–;) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.)) இலகிய நீள் முடி, Ilakiyai Neel Mudi - விளங்காநின்ற நீண்ட கிரிடத்தையுடைய மாவலி தன், Mavali Than - மஹாபலியினது பெரு வேள்வியில், Peru Velviyil - பெரிய யாகத்திலே மாண் உரு ஆய், Maan Uru Aai - வாமந ரூபியாய் (சென்று) சலமொடு, Salamodu - கபடமான வகையாலே மா நிலம் கொண்டவனுக்கு, Maa Nilam Konda Vanukku - உலகத்தையெல்லாம் ஆக்ரமித்துக்கொண்ட பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது கன்னி மா மதிள் சூழ் கருவூர்வெருவ, Kanni Maa Mathil Soozh Karuvurveruva - அழிவில்லாத பெரிய மதிள்களாலே சூழப்பட்ட கருவூர்என்னும் நகரம் நிலைகலங்கவும் பல படை சாய, Bala Padai Saaya - சதுரங்க ஸேனை முடியும்படியாகவும், உலகு உடை மன்னவன் தென்னவனை வென்றான், Ulaku Udai Mannavan Thennavanai Vendraan - உலகங்களை அடிமையாகவுடைய அரசனாயிருந்த பாண்டியனை வென்ற பல்வவன் |