திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1138 | பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபத் சகன் -என்கிறது – திரு வயிற்றிலே எடுத்து வைத்து பிரளயத்துக்கு அஞ்சவும் அறியாதே ஓர் ஆலின் இலை மேல் அது தன்னிலும் ஒரு பவனான இளம் தளிரிலே யோக நித்தரை கொண்டு அருளின ஆதார ஆதேய பாவம் தன் புத்த்ய அதீநமாம் படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை ஸ்ரீ திருக் கோவலூரிலே நான் காணப் பெற்றேன் -என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும் வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்,
எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர் இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை,
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான் மறையாளர் சோமுச் செய்ய,
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-1 | பதவுரை Show / Hideமஞ்சு ஆடு வரை ஏழும், Manju Aadu Varai Ezhum - மேகங்கள் உலாவப்பெற்ற குலபர்வதங்கள் ஏழும் கடல்கள் ஏழும், Kadalgal Ezham - ஸமுத்ரங்கள் ஏழும் வானகமும், Vanagakum - ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்களும் மண்ணகமும், Mannakum - மண்ணுலகமும் மற்றும் எல்லாம், Mattrum Ellam - மற்றுமுள்ள எல்லாப்பொருள்களும் எஞ்சாமல், Enjamal - அழிந்து போகாதபடி வயிறு அடக்கி, Vayiru Adakki - (இவற்றையெல்லாம்) திருவயிற்றிலே எடுத்து வைத்து ஓர்ஆலின் இள தளிரின், Oraalin Ila Thalirin - ஒப்பற்ற ஆலமரத்தினுடைய பால்மாறாத இளந்தளிரிலே மேல் கண் வளர்ந்த, Mel Kan Valarntha - துயில் கொண்ட ஈசன் தன்னை, Eesan Thannai - ஸ்வாமியை வளம் நீர், Valam Neer - மணிகள் முத்துக்கள் முதலியவற்றைக் கொழிக்கின்ற நீரானது துஞ்சா, Thunja - ஒருகாலும் மாறாமல் சுரக்கும், Surakkum - பெருகி வரப்பெற்ற பெண்ணை, Pennai - பெண்ணையாற்றினுடைய தென்பால், Thenpal - தென்கரையிலே, தாய, Thaaya - ஒருபலனையும் விரும்பாமையாகிற மனத்தாய்மையை யுடையவர்களாய் நால் மறை ஆளர், Naal Marai Aalar - நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களான வைதிகோத்தமர்கள் சோமு செய்ய, Somu Seyya - ஸோமயாகங்களைப் பண்ண (அத்தாலே) செம் சாலி, Sem Saali - செந்நெற்பயிர்களானவை விளை வயலுள், Vilai Vayalul - விளைநிலமான வயல்களிலே திகழ்ந்து தோன்றும், Thigazhndhu Thonrum - செழித்து விளங்கப்பெற்ற திருக்கோவலூர்அதனுள், Thirukkovalurathanul - திருக்கோவலூரென்னும் திருப்பதியிலே நான் கண்டேன், Naan Kandein - நான் ஸேவிக்கப்பெற்றேன். |