திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1139 | பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனை ஆஸ்ரயித்து நான்மறைகளைக் கொண்டு-ஆத்மேத்யேஸ்து க்ருஹணீயாத் -என்றும் ஆத்மேதிதிது பகச்சந்தி க்ராஹயந்திச -என்கிறபடியே அவனை பிரகாரியாகவும் தங்களை பிரகாரமாகவும் காலங்கள் தோறும் ஒருப்படிப்பட அனுசந்திதுச் சொல்லுகிற அத ப்ராஹ்மியான ஸ்ரீ லஷ்மி மாறாமே செல்லுமாயிற்று -ஸ்ரீ பகவத் உபாசன ரூப சம்பத்- என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2 | கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம்கொண் டமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில்,
சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை தாமிருவ ரடிவருடும் தன்மை யானை,
வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்,
சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன்நானே. –2-10-2 | பதவுரை Show / Hideஅமரர், Amarar - பிரமன் முதலான தேவர்கள் (- (திருக்கோவலூரதனுள்—;) (நான் கண்டேன்–.)) கொந்து அலர்ந்த நறுதுழாய், Kondhu Alarntha Naruthuzhai - கொத்துக்கொத்தாக மலர்கின்ற மணம்மிக்க திருத்துழாய் மலர்களையும் சாந்தம், Shantham - சந்தனத்தையும் தாபம், Thabam - தாபத்தையும் தீபம், Deepam - தீபத்தையும் கொண்டு, Kondhu - கையிலேந்திக்கொண்டு தொழ, Thozha - ஆச்ரயிக்க பணம் கொள் பாம்பில், Panam Kol Pambhil - (ஆனந்தத்தினால்) படமெடுத்திருக்கிற திருவனந்தாழ்வான் மேலே. சந்து அணி மெல் முலை மலரான, Sandhu Ani Mel Mulai Malaraana - சந்தனத்தாலே அலங்கரிக்கப்பட்ட மெல்லியமுலைகளயுடைய பெரிய பிராட்டியும் தரணி மங்கை, Tharani Mangai - பூமிப்பிராட்டியும் ஆகிற இருவர் தாம், Irivar Thaam - இரண்டு தேவிமார்களும் அடி வருடும் தன்மையானை, Adi Varudum Thanmaiyana - திருவடிகளைப் பிடிக்கும்படியாகவுள்ள எம்பெருமானை, ஏழ் இசை, Ezhu Isai - ஸப்தஸ்வரங்களையும் ஆறு அங்கம், Aaru Angam - ஆறு அங்கங்களையும் ஐந்து வளர் வேள்வி, Ainthu Valar Velvi - பஞ்ச மஹா யஜ்ளுங்களையும் மூன்று தீயும், Moondru Theeyum - மூன்று அக்நிகளையுங்கொண்டு வந்தனை செய்து, Vandhanai Seidhu - எம்பெருமானை யடிபணிந்து நால் மறைகள், Naal Maraihal - நான்கு வேதங்களை இருபொழுதும், Irupozhudum - இரவும் பகலும் சிந்தனை செய்து, Sindhanai Seythu - அநுஸந்தித்துக்கொண்டு ஒன்றும், Ondrum - (வைதிகரிகள்) பொருந்தி வாழ்வதற்கிடமான செல்வம், Selvam - அழகு பொலிந்த |