திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1140 | பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையிலே திரு ஆழியையும் விட அறியாதே-ஆகாச அவகாசத்தை இடம் அடைத்துக் கொண்டு தோற்றி – ஏவர வெளியடைய-அதினுடைய புண் ஆறும்படியாக திருக் கையாலே ஸ்பரசித்து திருப் பரியட்டத் தலையாலே ஒற்றிப் பண்ணின சிசிரோ உபசாரங்களை நினைக்கிறது-மூன்றாம் பாசுரத்தில்) 3 | கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி,
அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை,
எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட,
செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-3 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்பொருகால். (- (மலர்களுண்டாகப் பெற்றதனால்) (திருக்கோவலூரதனுள் , நான் கண்டேன்–.)) கொழுந்து, Kozhundu - தளிர்களையும் அலரும் மலர், Alarum Malar - விகஸிக்கின்ற புஷ்பங்களையுமுடைய சோலை குழாம் கொள் பொய்கை, Solai Kuzham Kol Poigai - சோலைகளின் கூட்டங்கள் சூழ்ந்த தடாகத்திலே கோள் முதலை, Kol Muthalai - வலிவுள்ள முதலை வாள் எயிறு, Vaal Eiyiru - (தனது) வாள் போன்ற பற்களினால் கொண்டற்கு, Kondarthu - காலைக் கவ்வினதற்கு எள்கி, Elgi - மெலிந்து அழுந்திய, Azhundhiya - வருந்தின மா களிற்றினுக்கு, Maa Kalirittinukku - கஜேந்திராழ்வானுக்காக ஆழி ஏந்தி, Aazhi Aendhi - திருவாழியை எடுத்துக்கொண்டு அந்தரம் மேவர தோன்றி, Andharam Mevara Thondri - ஆகாசம் இடமடையும்படி வந்து தோன்றி அருள் செய்தானை, Arul Seithanai - (அவ்வானைக்குக்) கிருபை பண்ணின பெருமானை. எழுந்த, Ezhundha - (நீரில்நின்றும்) மேற்கிளம்பின கரு நீலம் மலர், Karun Neelam Malar - கருநெய்தற் பூவானது இருந்தில் காட்ட, Irundhil Kaata - கரிபோல் விளங்கவும் இரு புன்னை, Iru Punnai - பெரிய புன்னை மரங்களானவை அரும்பி, Arumbi - அரும்புகளுண்டாகப் பெற்றதனால் முத்து, Muthu - முத்துக்களையும் செம்பொன், Sembon - பசும்பொன்னையும் காட்ட, Kaata - தோற்றுவிக்கவும், செழுநீர்தடம் கமலம், Sezhuneerthadam Kamalam - செழித்த நீரையுடைய தடாகங்களில் தாமரைகள் தீவிகை போல் காட்டும், Theevigai Pol Kaattum - விளக்குப்போலே விளங்கவும் பெற்ற |