திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1141 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1141பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால் கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும் சேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம் ஆயனே கரும்பு-மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய கரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று-என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை, ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும் அடியவர்கட் காரமுத மானான் றன்னை, கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக் குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-4
பதவுரை Show / Hide
தாங்க அரு போர், Thaanga Aru Por - ஒருவராலும் தாங்க முடியாத (கொடிய) யுத்தம் நடந்தவல்ல (- (அத்தாலே நீர்பாய்ந்தாற் போலேயாம்) (திருக்கோவலூரதனுள், நான் கண்டேன்–.))
மாலி, Maali - மாலியென்னுமரக்கன்
பட, Pada - முடியும்படி
பறவை, Paravai - கருடனை
ஊர்ந்து, Oorndhu - (போர்க்களத்தில்) நடத்தி (மாலியைக் கொன்றொழித்து)
தராதலத்தோர்குறை முடித்த, Tharaathalathorkurai Muditha - புமியிலுள்ள ஸத்துக்களுடைய குறைகளைத் தீர்த்த
தன்மையானை, Thanmaiyanaai - பெருமையுடையவனும்,
கண் நீர்அரும்பி சோர்ந்து, Kan Neerarumbi Soorndhu - கண்ணீர்அரும்பரும்பாகப் பெருகி (ஆநந்த பாஷ்பங்கொண்டு)
அன்பு கூரும், Anbu Koorum - பக்தி பண்ணுகிற
அடியவர்கட்கு, Adiyavarkadku - பக்தர்களுக்கு (முதலாழ்வார்கட்கு)
ஆங்கு, Aangu - அப்போதே
ஆர்அமுதம் ஆனான் தன்னை, Aar Amudham Aanaan Thannai - அருமையான அமுதம் போன்றிருந்தவனுமான பெருமானை
கோங்கு அரும்பு, Kongu Arumbu - கோங்கின் புக்களும்
சுரபுன்னை, Surapunnai - சுரபுன்னைகளும்
குரவு, Kuravu - குரவுகளும்
ஆர், Aar - செறிந்திருக்கிற
சோலை, Solai - சோலைகளிலே
குழாம் வரி வண்டு, Kuzham Vari Vandu - கூட்டங் கூட்டமாகக் கூடிய அழகிய வண்டுகள்
இசை பாடும் பாடல் கேட்டு, Isai Paadum Paadal Kettu - (மதுபான மயக்கத்தாலே) இசை பாடுகிற பாடல்களைச் கேட்டு
தீம் கரும்பு, Theem Karumbu - இனிய கரும்புகளானவை
கண் வளரும், Kan Valarum - ஒரு கண் ஏறி வளரப்பெற்ற
கழனி, Kazhani - கழனிகளினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்ட