திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1143 | பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் தனக்கு தாரகமாய் அது பெறாத போது அவன் முடியும் அளவாய் இருக்குமா போலே அவன் வியாபாரம் தங்களுக்கு பிராணகரமாய் இருக்கும்படியாலே அத்தை தேடா நிற்பார்கள் இறே இவர்கள் கருங்களிறே போலே-தன்னை உணராதே நின்ற நிலை-பிரதிகூலரான துர்யோநாதிகள் கட்டின கட்டாகில் இறே அவிழ்த்துக் கொண்டு போக வல்லது-அனுகூலர் கட்டினால் அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இறே- விஸ்மய நீயமான கலையை வாகனமாக உடையளாய் எட்டுத் தோளை உடைய துர்க்கை அவள் ஆயிற்று அவ் ஊருக்குக் காவல் பிறந்த அன்று காட்டிக் கொடுத்துப் போனோம் -என்னும் அவ் இழவு தீர அவள் ஊர்ந்து நோக்குகிற தேசம் ஆயிற்று இதுக்கு முன்பு இங்கனே இருப்பதொரு லாபம் வ்யுத்புத்தி பண்ணி அறியாத நான் ஸூ ரஷிதமான தேசத்திலே காணப் பெற்றேன்- என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங் குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க,
தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை,
வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு, வியன்கலையெண் தோளினாள் விளங்கு, செல்வச்
செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-6 | பதவுரை Show / Hideஒளியால் சென்று, Oliyal Sendru - (தன்னுடைய புன்முறுவலின்) காந்தியாலே இருட்டான இடங்களிலே நடந்து சென்று (- (திருக்கோவலூரதனுள்–;) (நான் கண்டேன்–.)) அங்கு, Angu - அவ்விடங்களிலே உறி ஆர்ந்த, Uri Aarntha - உறிகளிலே நிரம்பிய நறுவெண்ணெய், Naruvennai - மணம்மிக்க வெண்ணெயை உண்டானை ஆய்ச்சி கண்டு, Undaanaai Aaychchi Kandu - வாரியுண்ணும்போது யசோதையானவள் கண்டு உரலோடு ஆர்க்க, Uralodu Aarkka - உரலோடே பிணைத்துக்கட்ட (அதனாலே) தறி ஆர்ந்த கரு களிறு போல நின்று, Thari Aarntha Karu Kaliru Pola Nindru - கட்டுத்தறியிலே சேர்த்துக் கட்டப்பட்ட கரிய யானை போலக்கட்டுண்டிருந்து தட கண்கள் பனிமல்கும் தன்மை யானை, Thada Kangal Panimalgum Thanmai Yaanai - பெரிய திருக்கண்கள் நீர்நிரம்பப்பெற்ற தன்மையை யுடைய பெருமானை, வெறி ஆர்ந்த மலர்மகள், Veri Aarntha Malarmagal - பரிமளம் நிறைந்த தாமரைப் பூவில்பிறந்த பிராட்டியோடும் நாமங்கையோடு, Naamankaiyodu - ஸரஸ்வதியோடும் வியன் கலை எண்தோளினான், Viyan Kalai Entholinan - அழகிய மானை வாஹனமாக வுடையளாய் எட்டுத் தோள்களை யுடையளான துர்க்கையோடும் விளங்கு செல்வம், Vilangu Selvam - விளங்குகையாகிற செல்வத்தையுடையதும் செறி ஆர்ந்த, Serri Aarntha - நெருக்கம்பொருந்திய மணி மாடம், Mani Maadam - ரத்னமயமான மாடங்கள் திகழ்ந்து தோன்றும், Thigazhndhu Thonrum - மிகவும் விளங்கப்பெற்றதுமான |