திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1144 | பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வில் விழவு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு அழைத்து க்ருத்ர்மத்தாலே நலிய அழைத்த கம்சனை அவன் நினைவு அவன் தன்னோடே போக்கி அவனுக்கு மிருத்யு ஆனவனை-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7 | இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து,
வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை,
கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட,
செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-7 | பதவுரை Show / Hideஇரு கை மா கரி முனிந்து, Iru Kai Maa Kari Muninthu - நீண்ட துதிக்கையையுடைய ஐந்துவாகிய (குவலயாபீடமென்னும்) யானையைச் சீறி முடித்து (- (அவற்றின் கனிகள்) (திருக்கோவலூரதனுள். நான் கண்டேன்–.)) பரியை கீறி, Pariyai Keerki - குதிரை வடிவெடுத்துவந்த கேசியென்னு மசுரனைப் பிளந்தொழித்து இனம் ஏழ் விடைகள் அடர்த்து, Inam Ezhu Vidaihal Adaruthu - ஒன்றோடொன்று ஒத்த ஏழு ரிஷபங்களையும் (நப்பின்னைக்காக) வலியடக்கி மருதம் சாய்த்து, Marudham Saaythu - இரட்டை மருதமரத்தை முறித்து வரும் சகடம் இற உதைத்து, Varum Sakadham Ira Udaithu - (தன்னைக்கொல்ல) மேல் விழுந்த சகடம் முறியும்படி அதனை யுதைத்து மல்லை அட்டு, Mallai Attu - மல்லர்களை த்வம்ஸம்பண்ணி (கடைசியாக) வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை, Vanjam Sei Kanjanukku Nanju Aananaai - கபடச் செயல்களைச் செய்து வந்த கம்ஸனுக்கு விஷமாகி அவனையும் முடித்த பெருமானை, கரு கமுகு, Karukamuku - கறுத்த பாக்கு மரங்கனினுடைய பசு பாளை, Pasu Paalai - பசுமை தங்கிய பாளையானது வெண் முத்து ஈன்று, Ven Muthu Eendru - வெளுத்த முத்துக்களை வெளிப்படுத்தவும் காய் எல்லாம், Kaai Ellam - (அதன்) காய்களெல்லாம் மரகதம் ஆய், Maragatham Aayi - மரகதம்போல் விளங்கவும் பவளம் காட்ட, Pavalam Kaata - பவழங்களைக் காட்டவும் செருத்தி, Seruththi - சுரபுன்னைகள் மொட்டு, Mottu - மொக்குகளை மிக அலர்த்தும், Miga Alarththum - மிக அலரச் செய்யவும் பெற்ற தேன் கொள் சோலை, Then Kol Solai - தேன் நிறைந்த சோலைகளையுடைய |