திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1146 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1146பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கல்பக தரு பணைத்து பூத்தாப் போலே ஆயிற்று ஸ்ரீ பிராட்டிமார் உடன் திவ்ய ஆயுதத்தை தரித்தால் இருக்கும் படி- தனிக் கற்பகம் அன்றிக்கே சோலை செய்து இருப்பதொரு கல்பகம் போலே நின்று – அதாகிறது-சர்வ அபேஷித ப்ரதனாய் இருக்கும் படி – நாங்கள் எங்கள் உடைய ரஷணத்துக்கு கடவோம் அல்லோம் நீயே கடவாய் -என்று தன் கை பார்த்து இருக்கும் அவர்கள் பக்கலிலே மிக்க பிரசாதத்தைப் பண்ணும்படியை மநோ ரதிக்குமவனை – அருள் பண்ணா விட்டால் தான் விடலாமோ – இவன் வடிவைக் கண்டால் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற, காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை, சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை, தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-9
பதவுரை Show / Hide
தூ வடிவின், Thoo Vadivin - அழகிய வடிவையுடைய (- (திருக்கோவலூரதனுள். நான் கண்டேன்–.))
பார்மகள் பூ மங்கையோடு, Paar Magal Poo Mangaiyodu - பூமிப்பிராட்டியோடும் பெரிய பிராட்டியோடும் கூடி
இருபால், Irupaal - இரண்டு திருக்கைகளிலும்
சுடர் ஆழி சங்கு பொலிந்து தோன்ற, Sudar Aazhi Sangu Polinthu Thonra - திருவாழி திருச்சங்குகள் பள பளவென்று விளங்க
காவடியின் கற்பகம் போல நின்று, Kaavadiyin Karppagam Pola Nindru - சோலைசெய்திருக்கின்ற கற்பகம்போல நின்று
கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை, Kalandavarkadku Arul Puriyum Karuthinana - பக்தர்களுக்குக் கிருபைபண்ணுந் திருவுள்ளமுடையவனும்,
சே அடி கை திருவாய் கண் சிவந்த ஆடை, Sae Adi Kai Thiruvai Kan Sivantha Aadai - சிவந்த திருவடிகள் திருக்கைகள் திருப்பவளம் திருக்கண் திருப்பிதாம்பரம் இவற்றோடு கூடி
செம் பொன் செய் திரு உருவம்  ஆனான் தன்னை, Sem Pon Sei Thiru Uruvam Aanaan Thannai - செம்பொன் போன்ற திருமேனியையுடையவனுமான பெருமானை
தீ வடிவின் சிவன் அயன் போல் வார்மன்னு, Thee Vadivin Sivan Ayan Pol Vaar Mannu - நெருப்புப் போன்ற வடிவை யுடையனான சிவனும் பிரமனும்   போல அரிய பெரிய காரியங்கள் செய்யவல்ல மஹான்கள் பொருந்தியிருக்கிற