திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1147 | பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்கள் –ஐஸ்வர்யாத்துக்காகவும் ஆத்ம பிராப்திக்காகவும் பகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க- ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக எங்கும் புக்கு வியாபித்து அந்யைரத்ருஷ்டனாய்-நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்- என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை,
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று
வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன் வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,
காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக் கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. –2-10-10 | பதவுரை Show / Hideவாரணம் கொள் இடர் கடிந்த மாலை, Vaaranam Kol Idar Kadintha Maalai - கஜேந்திராழ்வானடைந்த துக்கத்தைப் போக்கின பெருமானும் (- (என்ன பலனைப் பெறுவர்களெனில்)) நீலம் மரதகம் மழை முகில்போல்வான் தன்னை, Neelam Maradhagam Mazhai Mukilpolvan Thannai - கருநெய்தற்பூ, மரகதப்பச்சை, குளிர்ந்தமேகம் ஆகிய இவற்றை யொத்தவனுமான கோபாலனை சீர், Seer - ஆத்ம குணங்களாலே அணங்கு, Anangu - (அனைவரும்) ஆசைப்படக்கூடிய மறையாளர், Maraiyalar - வைதிகரிகள் நிறைந்த செல்வம், Niraindha Selvam - நிறைந்திருக்கையாகிற அழகு பொருந்திய திரு கோவலூர்அதனுள், Thiru Kovalooradhanul - திருக்கோவலூரென்னுந் திருப்பதியிலே கண்டேன் என்று, Kandeen Endru - ஸேவிக்கப்பெற்றேனென்று, வார்அணங்கு முலை மடவார்மங்கை, Vaaranangu Mulai Madavarmangai - கச்சினால் அழகுபெற்ற முலைகளையுடைய மாதர்நிறைந்த திருமங்கை நாட்டுக்கு வேந்தன், Vendhan - தலைவரும் வாள், Vaal - வாட்படையை நிருபகமாகவுடையருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிற்செய்த ஐந்தும் ஐந்தும், Aindhum Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார்தாம், Vallaartham - ஓதவல்லவர்கள், உலகம், Ulagam - உலகத்திலுள்ள பலவகையதிகாரிகள் காரணங்களால், Kaaranangalal - தங்கள் தங்களுக்கு இஷ்டமான பலன்களைப் பெற வேண்டியகாரணத்தினால் கலந்து, Kalandhu - திரண்டு வந்து ஏத்த, Aetha - துதிக்க கரந்து ஏங்கும் பரந்தானை, Karandhu Aengum Parandhanai - ஒருவர்க்கும் க்ரிணவொண்ணாதபடியிருந்து எல்லாவிடங்களிலும் வியாபித்திருக்கின்ற பரமாத்மாவை காண்பர், Kaanbar - ஸேவிக்கப்பெறுவர்கள். |